ஐஸ்கிரீம் வித் தேங்காய்ப்பால்



என்னென்ன தேவை?

தேங்காய்ப்பால், விப்பிங் கிரீம், கன்டென்ஸ்டு மில்க் - தலா 1/2 கப்,
தேங்காய்த்துருவல் - 1/4 கப்.

எப்படிச் செய்வது?

பாத்திரத்தில் விப்பிங் கிரீம் சேர்த்து எலெக்ட்ரிக் பீட்டரில் நன்றாக அடித்து அதனுடன் கன்டென்ஸ்டு மில்க், தேங்காய்ப்பால் சேர்த்து நன்கு அடிக்கவும். பின்பு தேங்காய்த்துருவல் கலந்து ஃப்ரிட்ஜில் வைத்து எடுத்து ஜில்லென்று பரிமாறவும்.