தேங்காய்ப்பால் பர்பி



என்னென்ன தேவை?

தேங்காய்த்துருவல் - 1 கப்,
தேங்காய்ப்பால் - 1/4 கப்,
சர்க்கரை - 1/2 கப்,
நெய் - 1 டீஸ்பூன்.

எப்படிச் செய்வது?

நான்ஸ்டிக் தவாவில் தேங்காய்த்துருவல், சர்க்கரை, தேங்காய்ப்பால் ஊற்றி நன்றாக கைவிடாமல் கிளறி கொண்டே இருக்கவும். அனைத்தும் சேர்ந்து சுருண்டு வரும்பொழுது நெய் தடவிய தட்டில் கொட்டி விருப்பமான வடிவத்தில் வெட்டி பரிமாறவும்.