தேங்காய்ப்பால் பலூடா



என்னென்ன தேவை?

சேமியா - 2 டீஸ்பூன்,
தேங்காய்ப்பால் - 3/4 கப்,
சப்ஜா விதை - 1 டீஸ்பூன்,
சர்க்கரை - 2 டீஸ்பூன்,
ஸ்ட்ராபெர்ரி கிரஷ் - 1 டீஸ்பூன்.

எப்படிச் செய்வது?

சேமியாவை வேகவைத்து வடித்துக் கொள்ளவும். சப்ஜா விதையை 1 மணி நேரம் ஊறவைக்கவும். தேங்காய்ப்பாலுடன் சர்க்கரையை கலந்து கொள்ளவும். ஒரு உயரமான கண்ணாடி டம்ளரில் முதலில் சப்ஜா விதை அதன் மீது வெந்த சேமியா போட்டு அதன் மீது ஸ்ட்ராபெர்ரி கிரஷ் ஊற்றி அதற்கு மேலே தேங்காய்ப்பால் ஊற்றி பரிமாறவும்.