புதினா சிக்கன் தேங்காய்ப்பால்



என்னென்ன தேவை?

சிக்கன் - 1/4 கிலோ,
புதினா, கொத்தமல்லித்தழை - தலா 2 கைப்பிடி அளவு,
பச்சைமிளகாய் - 6,
வெண்ணெய் - 2 டீஸ்பூன்,
தேங்காய்ப்பால் - 3 கரண்டி,
உப்பு - தேவைக்கு.

எப்படிச் செய்வது?

புதினா, கொத்தமல்லியை சுத்தம் செய்து பச்சைமிளகாயுடன் சேர்த்து அரைத்துக் கொள்ளவும். கடாயில் வெண்ணெய் சேர்த்து உருகியதும் சிக்கன், உப்பு சேர்த்து வதக்கி அரைத்த விழுது, 1/2 கப் தண்ணீர் சேர்த்து சிறு தீயில் வைத்து வேகவிடவும். சிக்கன் நன்றாக வெந்ததும் தேங்காய்ப்பால் ஊற்றி இறக்கி இட்லி, தோசை, சாதத்துடன் பரிமாறவும்.