வெண்டைக்காய் ஸ்டூ



என்னென்ன தேவை?

வெண்டைக்காய் - 6,
வெங்காயம், தக்காளி - தலா 1,
இஞ்சி பூண்டு விழுது - 1 டீஸ்பூன்,
மிளகாய்த்தூள் - 2 டீஸ்பூன்,
கரம்மசாலாத்தூள் - 1 டீஸ்பூன்,
தேங்காய்ப்பால் - 1/2 கப்,
உப்பு, எண்ணெய் - தேவைக்கு.

எப்படிச் செய்வது?

கடாயில் எண்ணெயை காயவைத்து நீளமான துண்டுகளாக நறுக்கிய வெண்டைக்காயை போட்டு பொரித்தெடுத்து தனியே வைக்கவும். பிறகு அதே எண்ணெயில் பொடியாக நறுக்கிய வெங்காயம், தக்காளியை சேர்த்து நன்றாக வதக்கி கரம்மசாலாத்தூள், இஞ்சி பூண்டு விழுது, உப்பு, மிளகாய்த்தூள் சேர்த்து வதக்கி 1 கப் தண்ணீர் ஊற்றி நன்றாக கொதிக்க விடவும். தண்ணீர் சிறிது சுண்டியதும் பொரித்த வெண்டைக்காய், தேங்காய்ப்பால் சேர்த்து ஒரு கொதி வந்ததும் இறக்கி சாதம், இட்லி, தோசையுடன் பரிமாறவும்.