பனீர் தேங்காய்ப்பால் கிரேவி



என்னென்ன தேவை?

நறுக்கிய பனீர் துண்டுகள் - 20,
வெண்ணெய் - 3 டீஸ்பூன்,
கஸ்தூரிமேத்தி - 1 டீஸ்பூன்,
சிகப்பு மிளகாய்த்தூள் - 1 டேபிள்ஸ்பூன்,
தேங்காய்ப்பால் - 4 டீஸ்பூன்,
உப்பு - தேவைக்கு.

அரைக்க...

முந்திரி - 10, தேங்காய் துண்டு - 1, வெங்காயம், தக்காளி - தலா 2, பட்டை, ஏலக்காய் - தலா 1, லவங்கம் - 2.

எப்படிச் செய்வது?

அரைக்க கொடுத்த பொருட்களை விழுதாக அரைத்துக் கொள்ளவும். கடாயில் வெண்ணெய் சேர்த்து உருகியதும் அரைத்த விழுது, 1 கப் தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும். பின்பு மிளகாய்த்தூள், உப்பு, கஸ்தூரிமேத்தி சேர்த்து கொதிக்கும் பொழுது பனீர், தேங்காய்ப்பால் கலந்து மேலும் ஒரு கொதி விட்டு இறக்கி சப்பாத்தி, பரோட்டா, தோசையுடன் பரிமாறவும்.