தேங்காய்ப்பால் நட்ஸ் பூரி



என்னென்ன தேவை?

கோதுமை மாவு, தேங்காய்ப் பால் - தலா 1 கப்,
சர்க்கரை - 2 டீஸ்பூன்,
முந்திரி, காய்ந்த திராட்சை - தலா 5,
ஏலக்காய்த்தூள் - 1/2 டீஸ்பூன்,
உப்பு - 1 சிட்டிகை,
எண்ணெய் - தேவையான அளவு.

எப்படிச் செய்வது?

கோதுமை மாவு, உப்பு போட்டு கலந்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து கொள்ளவும்.  பின்பு சப்பாத்தியாக திரட்டி மூடி கொண்டு சிறு சிறு பூரியாக கட் செய்து சூடான எண்ணெயில் பொரித்தெடுத்து எண்ணெயை வடிக்கவும். ஒரு கிண்ணத்தில் தேங்காய்ப்பால், ஏலக்காய்த்தூள், சர்க்கரை சேர்த்து கலந்து அதன் மீது பொரித்த பூரிகளை போட்டு அதற்கு மேல் நறுக்கிய முந்திரி, திராட்சைகளை போட்டு அலங்கரித்து பரிமாறவும்.