இறால் மசாலா



என்னென்ன தேவை?

சுத்தமான இறால் - 1/4 கிலோ,
பொடியாக நறுக்கிய வெங்காயம்,
தக்காளி - தலா 2,
மிளகாய்த்தூள், கரம்மசாலாத்தூள் - தலா 1 டீஸ்பூன்,
இஞ்சி பூண்டு விழுது - 1 டீஸ்பூன்,
தேங்காய்ப்பால் - 1 கப்,
புதினா, கொத்தமல்லி - 1 கைப்பிடி அளவு,
உப்பு, எண்ணெய் - தேவைக்கு.

எப்படிச் செய்வது?

கடாயில் எண்ணெயை காய வைத்து வெங்காயம், இறால், உப்பு போட்டு வதக்கி, தக்காளி, இஞ்சி பூண்டு விழுது சேர்த்து நன்றாக வதக்கவும். பிறகு மிளகாய்த்தூள், கரம்மசாலாத்தூள் சேர்த்து வதக்கி 2 நிமிடம் மூடி வைத்து, தேங்காய்ப்பால், புதினா, கொத்தமல்லி போட்டு கிளறி இறக்கவும்.