தேங்காய்ப்பால் உருண்டை



என்னென்ன தேவை?

பச்சரிசி மாவு, தேங்காய்ப்பால் - தலா 1 கப்,
ஏலக்காய்த்தூள் - 1/2 டீஸ்பூன்,
பொடித்த பனங்கற்கண்டு - 2 டீஸ்பூன்.

எப்படிச் செய்வது?

தட்டில் பச்சரிசி மாவு, 1/2 கப் தேங்காய்ப்பால் ஊற்றி பிசைந்து பட்டாணி அளவிற்கு சிறு சிறு உருண்டைகளாக உருட்டி இட்லி தட்டில் வைத்து ஆவியில் வேகவைத்து எடுக்கவும். ஒரு கண்ணாடி கிண்ணத்தில் மீதியுள்ள தேங்காய்ப்பால், பனங்கற்கண்டு, ஏலக்காய்த்தூள் கலந்து வெந்த உருண்டைகளை போட்டு பரிமாறவும்.