முளைக்கூட்டுஎன்னென்ன தேவை?

மணத்தக்காளிக் கீரை - 1 கட்டு,
துவரம்பருப்பு - 100 கிராம்,
சீரகம் - 1/4 டீஸ்பூன்,
காய்ந்தமிளகாய் - 3,
எண்ணெய் - 2 டீஸ்பூன்,
புளிக்கரைசல், உப்பு - தேவைக்கு,
கடுகு - 1/4 டீஸ்பூன்,
உளுத்தம்பருப்பு - 1/2 டீஸ்பூன்.

எப்படிச் செய்வது?

மணத்தக்காளிக்கீரையை நன்கு வேகவைத்துக் கொள்ளவும். துவரம்பருப்பையும் வேகவைத்துக் கொள்ளவும். மிக்சியில் கீரை, துவரம்பருப்பு சேர்த்து விழுதாக அரைத்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெயை காயவைத்து கடுகு, உளுத்தம்பருப்பு, காய்ந்தமிளகாய், சீரகம் தாளித்து அரைத்த விழுது, புளிக்கரைசல், உப்பு சேர்த்து நன்றாக கொதிக்க வைத்து சிறிது கெட்டியாக ஆனதும் இறக்கி சாதத்துடன் பரிமாறவும்.