உளுத்தம் கஞ்சிஎன்னென்ன தேவை?

கைக்குத்தல் அரிசி - 1 டம்ளர்,
தோலுள்ள உளுந்து - 1/2 டம்ளர்,
பூண்டு - 5 பல், உப்பு - தேவைக்கு.

எப்படிச் செய்வது?

கைக்குத்தல் அரிசியை கழுவி 2 மணி நேரம் ஊறவைக்கவும். குக்கரில் அரிசி, உளுந்து, பூண்டு, 5 டம்ளர் தண்ணீர் ஊற்றி, வேகவைத்து மசித்து உப்பு போட்டு கலந்து, மீண்டும் சிறிது தண்ணீரை ஊற்றி கொதிக்க வைத்து இறக்கவும்.