பப்பாயா ஷேக்



என்னென்ன தேவை?

பப்பாளிப் பழத்துண்டுகள் - 15,
தோல் சீவி எடுத்த கற்றாழை ஜெல் - 1/2 டீஸ்பூன்,
பட்டைத்தூள் - 2 சிட்டிகை,
எலுமிச்சைச்சாறு - 2 டீஸ்பூன்.

எப்படிச் செய்வது?

மிக்சியில் பப்பாளிப் பழத்துண்டுகள், கற்றாழை ஜெல், பட்டைத்தூள் மூன்றையும் ஒன்றாக கலந்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி நன்கு மைய அரைத்து எலுமிச்சைச்சாறு கலந்து பரிமாறவும்.