வீட் சப்பாத்தி



என்னென்ன தேவை?

கோதுமை மாவு - 1/4 கிலோ,
வேகவைத்த துவரம்பருப்பு - 50 கிராம்,
வேகவைத்த வெந்தயக்கீரை - 1 கட்டு,
சீரகம் - 1/2 டீஸ்பூன்,
மஞ்சள் தூள் - 5 சிட்டிகை,
உப்பு - தேவைக்கு,
எண்ணெய் - 100 கிராம்.

எப்படிச் செய்வது?

கோதுமை மாவில் வெந்த துவரம்பருப்பு, வெந்தயக்கீரை, சீரகம், மஞ்சள் தூள், உப்பு கலந்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி பிசைந்து சிறு சிறு உருண்டையாக உருட்டி சப்பாத்தியாக திரட்டி சூடான தவாவில் போட்டு எண்ணெய் விட்டு இருபுறமும் வெந்ததும் எடுத்து பரிமாறவும்.