தலியா



என்னென்ன தேவை?

கோதுமை ரவை, சேமியா, ரவை - தலா 100 கிராம்,
நறுக்கிய பெல்லாரி வெங்காயம் - 3,
நறுக்கிய பச்சைமிளகாய் - 3,
நறுக்கிய தக்காளி - 2, கடுகு - 1/4 டீஸ்பூன்,
கடலைப்பருப்பு - 1/2 டீஸ்பூன்,
உளுத்தம்பருப்பு - 1/2 டீஸ்பூன்,
உப்பு - தேவைக்கு,
கடலை எண்ணெய் - 4 டீஸ்பூன்,
கறிவேப்பிலை - 1 ஆர்க்கு.

எப்படிச் செய்வது?

வெறும் கடாயில் கோதுமை ரவை, ரவையை வறுத்து எடுத்து தனியே வைக்கவும். அதே கடாயில் 1 டீஸ்பூன் எண்ணெய் விட்டு சேமியாவை வறுத்து எடுத்து தனியே வைக்கவும். மற்றொரு கடாயில் மீதியுள்ள எண்ணெயை ஊற்றி சூடானதும் கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, பச்சைமிளகாய், வெங்காயம், தக்காளியை சேர்த்து நன்கு வதக்கி, தேவையான அளவு தண்ணீரை ஊற்றி உப்பு போட்டு கொதிக்க விடவும். நன்கு கொதி வந்ததும் கோதுமை ரவை, சேமியா, ரவையை போட்டுக் கிளறி வெந்ததும் கறிவேப்பிலை தூவி இறக்கி சூடாக பரிமாறவும்.