நெல்லி முள்ளி பச்சடி



என்னென்ன தேவை?

நெல்லிக்காய் வற்றல் - 10,
பச்சைமிளகாய் - 3,
கெட்டித்தயிர் - 1/4 லிட்டர்,
தேங்காய்த்துருவல் - 5 டீஸ்பூன்,
கடுகு, உளுத்தம்பருப்பு - தலா 1/4 டீஸ்பூன்,
கடலை எண்ணெய் - 1 டீஸ்பூன்,
உப்பு - தேவைக்கு.

எப்படிச் செய்வது?

நெல்லிக்காய் வற்றலை வெந்நீரில் 2 மணி நேரத்திற்கு ஊறவைக்கவும். மிக்சியில் ஊறிய நெல்லிக்காய், பச்சைமிளகாய், தேங்காய்த்துருவல் சேர்த்து விழுதாக அரைத்து கொள்ளவும். தயிரை நன்கு அடித்து அத்துடன் அரைத்த விழுது, உப்பு சேர்த்து கலந்து கொள்ளவும். கடாயில் எண்ணெயை காயவைத்து கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்து பச்சடியில் கொட்டி கலந்து பரிமாறவும்.

குறிப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள நெல்லி முள்ளி பச்சடி மட்டும் சாதத்தில் கலந்துதான் சாப்பிட வேண்டும். மற்ற பச்சடிகளை
அப்படியே சாப்பிடலாம்.