வாழைப்பூ பொடிஎன்னென்ன தேவை?

சுத்தம் செய்த வாழைப்பூ - 5 கைப்பிடி,
தோலுள்ள உளுந்து - 100 கிராம்,
கடலைப்பருப்பு - 50 கிராம்,
காய்ந்தமிளகாய் - தேவைக்கு,
பொடியாக நறுக்கிய பெல்லாரி வெங்காயம் - 2,
பெருங்காயத்தூள் - 1/4 டீஸ்பூன்,
கடுகு - 1/4 டீஸ்பூன்,
புளி - பாக்கு அளவு,
உப்பு - தேவைக்கு,
கடலை எண்ணெய் - 50 கிராம்.

எப்படிச் செய்வது?

வாழைப்பூவை வேகவைத்து ஆறவைத்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெயை ஊற்றி சூடானதும் உளுந்து, கடலைப்பருப்பு, காய்ந்தமிளகாய், பெருங்காயத்தூள் சேர்த்து வறுத்து எடுத்து ஆறவிடவும். மிக்சியில் வறுத்த பொருட்கள், புளி, உப்பு சேர்த்து பாதி பொடித்துக் கொண்டு, வெந்த வாழைப்பூவை சேர்த்து பொலபொலவென்று பொடி செய்யவும். கடாயில் எண்ணெயை ஊற்றி சூடானதும் கடுகு தாளித்து வெங்காயத்தை சேர்த்து வதக்கி, அரைத்த பொடியை போட்டு சிறு தீயில் வைத்து கிளறி மீண்டும் பொலபொலவென்று வந்ததும் எடுத்து பரிமாறவும்.