ராகி, கம்பு கொழுக்கட்டை



என்னென்ன தேவை?

ராகி, கம்பு - தலா 1/2 கப்,
கடுகு, உளுத்தம்பருப்பு - 1/4 டீஸ்பூன்,
நறுக்கிய பச்சைமிளகாய் - 2,
நறுக்கிய சின்னவெங்காயம் - 10,
எண்ணெய் - 2 டீஸ்பூன்,
உப்பு-தேவைக்கு.

எப்படிச் செய்வது?

கடாயில் எண்ணெயை காயவைத்து கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்து பச்சைமிளகாய், சின்னவெங்காயத்தை நன்கு வதக்கி இறக்கவும். பாத்திரத்தில் ராகி, கம்பு மாவு, உப்பு, வதக்கிய கலவை அனைத்தையும் சேர்த்து கலந்து வெந்நீரை தெளித்து மாவை நன்கு கலந்து பிடி கொழுக்கட்டைகளாக பிடித்து வேகவைத்து சூடாக பரிமாறவும்.