மொச்சைக் கூட்டு



என்னென்ன தேவை?

மொச்சை - 100 கிராம்,
பீன்ஸ் - 100 கிராம்,
தாளிப்பு வடகம் - 3 டீஸ்பூன்,
பொடியாக நறுக்கிய பெல்லாரி வெங்காயம்,
பூண்டு - தலா 4 டீஸ்பூன்,
வேகவைத்த பாசிப்பருப்பு - 75 கிராம்,
கடுகு - 1/4 டீஸ்பூன்,
உளுத்தம்பருப்பு - 1/2 டீஸ்பூன்,
உப்பு - தேவைக்கு,
கடலை எண்ணெய் - 2 டீஸ்பூன்.

எப்படிச் செய்வது?

பீன்ஸை பொடியாக வட்டமாக நறுக்கிக் கொள்ளவும். மொச்சை, பீன்ஸை வேகவைத்துக் கொள்ளவும். பாசிப்பருப்பையும் வேகவைத்து கொள்ளவும். கடாயில் எண்ணெயை காயவைத்து கடுகு, உளுத்தம் பருப்பு, தாளிப்பு வடகத்தை தாளித்து, வெங்காயம், பூண்டு போட்டு வதக்கி, வெந்த பாசிப்பருப்பு, மொச்சை, பீன்ஸ், உப்பு, தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கலந்து ஒரு கொதி வந்ததும் இறக்கவும்.