ரோஸ்மில்க் சிரப்




என்னென்ன தேவை?

சர்க்கரை - 1 கப்,
தண்ணீர் - 1/2 கப்,
ரோஸ் எசென்ஸ் - 1/2 டீஸ்பூன்,
சிட்ரிக் அமிலம் - 1/4 டீஸ்பூன்.

எப்படிச் செய்வது?

சர்க்கரையையும், தண்ணீரையும் சேர்த்து அடுப்பில் வைத்து கரைய விடவும். சர்க்கரை நன்றாக கரைந்ததும் சிட்ரிக் அமிலம் சேர்க்கவும். பிறகு ஒரு கொதி வந்ததும் இறக்கி வைத்து ஆறவிட்டு ரோஸ் எசென்ஸ் சேர்க்கவும். ரோஸ்மில்க் சிரப் ரெடி. சுத்தமான பாட்டிலில் ஊற்றி வைத்து கொள்ளவும். ஃப்ரிட்ஜில் வைத்தால் 1 வருடம் வரை கெடாமல் இருக்கும். 200 மி.லி. காய்ச்சிய பாலிற்கு 1 டேபிஸ்ஸ்பூன் சிரப் சேர்த்து ரோஸ்மில்க்கை பரிமாறவும்.

குறிப்பு: ரோஸ் எசென்ஸ் டிபார்ட்மென்ட்  கடைகளில் கிடைக்கும்.