தக்காளி சூப்




என்னென்ன தேவை?

தக்காளி - 1/4 கிலோ,
வெண்ணெய் - 1 டேபிள்ஸ்பூன்,
உப்பு, மிளகுத்தூள் - தேவையான அளவு,
சோள மாவு - 1/2 டேபிள்ஸ்பூன்,
அலங்கரிக்க வறுத்த பிரெட் துண்டுகள் - தேவைக்கு.

எப்படிச் செய்வது?

ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி கொதிக்க வைத்து, நன்கு கொதித்ததும் அதில் தக்காளியை போட்டு அடுப்பை நிறுத்தி விடவும். பாத்திரத்தில் மூடி போட்டு 10 நிமிடங்கள் வைக்கவும். பிறகு தக்காளியை எடுத்து தோலுரித்துக் கொள்ளவும். ஆறியதும் மிக்சியில் அரைத்து வடிகட்டிக் கொள்ளவும்.

பாத்திரத்தில் 1 கப் தண்ணீரை ஊற்றி சூடாக்கி, அதில் இச்சாறைச் சேர்க்கவும். சிறிது கொதி வந்ததும் சோள மாவை 1/4 கப் தண்ணீரில் கரைத்து இதனுடன் சேர்த்து கலந்து 1 நிமிடம் கழித்து வெண்ணெய் போட்டு இறக்கவும். பிறகு உப்பு, மிளகுத்தூள் கலந்து வறுத்த பிரெட் துண்டுகளை அலங்கரித்து பரிமாறவும்.