சுவீட் ரசோடி




என்னென்ன தேவை?

மேல் மாவிற்கு...

மைதா - 1 கப்,
உப்பு - தேவையான அளவு,
பேக்கிங் பவுடர் - 1 சிட்டிகை.

பூரணத்திற்கு...

வெல்லம் - 3/4 கப்,
கடலை மாவு - 1 கப்,
ஏலப்பொடி - சிறிது.

எப்படிச் செய்வது?

மைதா, உப்பு, பேக்கிங் பவுடர் கலந்து பூரி மாவு பதத்திற்கு பிசைந்து கொள்ளவும். பாத்திரத்தில் வெல்லம், சிறிது தண்ணீர் சேர்த்து வெல்லம் கரைந்ததும் வடிகட்டி வைத்துக் கொள்ளவும். கடாயில் கடலை மாவை வாசனை வரும்வரை வறுத்து வைத்துக் கொள்ளவும். அடுப்பில் வெல்லப்பாகு, ஏலப்பொடி, கடலை மாவு சேர்த்து கிளறி இறக்கவும். மைதா மாவை பூரி போல் திரட்டி, சிறிது பூரணத்தை உள்ளே வைத்து மூடி தட்டி சூடான எண்ணெயில் பொன்னிறமாக பொரித்தெடுத்து பரிமாறவும். தவாவில் சிறிது எண்ணெய் விட்டு சுட்டும் எடுக்கலாம்.