பனானா பிரெட் லோஃப்




என்னென்ன தேவை?

கோதுமை மாவு - 1 கப்,
பேக்கிங் பவுடர் - 1/2 டீஸ்பூன்,
பேக்கிங் சோடா - 1/2 டீஸ்பூன்,
உப்பு - 1/4 டீஸ்பூன்,
பூவன் வாழைப்பழம் - 2,
சர்க்கரை - 2 டேபிள்ஸ்பூன்,
எண்ணெய் - 4 டேபிள்ஸ்பூன்,
பால் - 1/2 கப்,
வெனிலா எசென்ஸ் - 1/4 டீஸ்பூன்,
நறுக்கிய பாதாம் - 2 டேபிள்ஸ்பூன்,
வெண்ணெய் - சிறிது.

எப்படிச் செய்வது?

கோதுமை மாவு, உப்பு, பேக்கிங் பவுடர், பேக்கிங் சோடா ஆகியவற்றை சலித்துக் கொள்ளவும். வாழைப்பழத்தை மிக்சியில் மசித்துக் கொள்ளவும். இத்துடன் எண்ணெய், வெனிலா எசென்ஸ், சர்க்கரை, பால் சேர்த்து கலக்கவும்.

பிறகு சலித்த மாவை போட்டு கலந்து ஒரு அலுமினிய பிரெட் பாத்திரத்தில் வெண்ணெய் தடவி மைதா தூவி இக்கலவையை அதில் போட்டு, மேலே பாதாம் தூவி 180 டிகிரி சூட்டில் அவனில் 45 நிமிடம் வேகவைத்து எடுக்கவும்.