மைசூர் போண்டா




என்னென்ன தேவை?

இட்லி மாவு - 1 கப்,
வெங்காயம் - 1,
பச்சைமிளகாய் - 2,
மைதா - 1/4 கப்,
ஆப்பசோடா - 1 சிட்டிகை,
கறிவேப்பிலை - 1 ஆர்க்கு,
பொரிக்க எண்ணெய் - தேவைக்கு.

எப்படிச் செய்வது?

இட்லி மாவில் மைதா, பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சைமிளகாய், கறிவேப்பிலை சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும். தண்ணீர் சேர்க்க வேண்டாம். கடைசியாக ஆப்பசோடா சேர்த்து கலந்து சூடான எண்ணெயில் 1 ஸ்பூன் வைத்து மாவை போண்டா போல் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுத்து சட்னி, தக்காளி சாஸுடன் பரிமாறவும்.

குறிப்பு: கை விரலால் மாவை கிள்ளி கிள்ளி எண்ணெயில் போட்டு எடுக்கலாம். இட்லி மாவில் இருக்கும் உப்பே போதுமானது. தனியாக உப்பு சேர்க்க அவசியமில்லை.