தேங்காய்ப்பால் முறுக்கு




என்னென்ன தேவை?

பச்சரிசி - 5 கப்,
உளுத்தம்பருப்பு - 1 கப்,
சீரகம் - 2 டீஸ்பூன்,
வெள்ளை எள் - 2 டீஸ்பூன்,
உப்பு, தேங்காய்ப்பால் - தேவையான அளவு.

எப்படிச் செய்வது?

பச்சரிசியை கழுவி நிழலில் உலர்த்திக் கொள்ளவும். உளுத்தம் பருப்பை பொன்னிறமாக வறுத்துக் கொள்ளவும். இரண்டையும் சேர்த்து மாவு மில்லில் கொடுத்து அரைத்துக் கொள்ளவும். இந்த மாவில் 3 கப் எடுத்து அதனுடன் சீரகம், எள், உப்பு கலந்து தேங்காய்ப்பால் சேர்த்து பிசையவும். சூடான எண்ணெயில் ஐந்து கண் உள்ள அச்சை முறுக்கு பிழியும் நாழியில் போட்டு மாவை போட்டு முறுக்கு பிழிந்து பொன்னிறமாக வந்ததும் எடுத்து பரிமாறவும்.