ரோஸ் குக்கீஸ்




என்னென்ன தேவை?

மைதா - 1/2 கப்,
அரிசி மாவு - 1/4 கப்,
உப்பு - 1 சிட்டிகை,
வெனிலா எசென்ஸ் அல்லது ஏலப்பொடி - 1/4 டீஸ்பூன்,
பொடித்த சர்க்கரை - 2 டேபிள்ஸ்பூன்,
பொரிக்க எண்ணெய் - தேவைக்கு.

எப்படிச் செய்வது?

எண்ணெயை தவிர மற்ற அனைத்து பொருட்களையும் ஒன்று சேர்த்து தண்ணீர் விட்டு நீர்க்க கரைத்து (பஜ்ஜி மாவை விட சிறிது தண்ணியாக கரைத்து) வைக்கவும். ரோஸ் குக்கீஸ் அச்சை சூடான எண்ணெயில் போட்டு எடுத்து, மாவில் முக்கால் மூழ்கும் வரை முக்கி எடுத்து எண்ணெயில் அச்சை விடவும். குக்கீஸ் சிறிது நேரத்தில் பிரிந்து தனியாக வந்து விடும். பொன்னிறமாக வந்ததும் எடுத்து பரிமாறவும்.