பாஸ்தா கீர்




என்னென்ன தேவை?

வேக வைத்த பாஸ்தா - 1/2 கப்,
சர்க்கரை - 1/2 கப், ஏலப்பொடி - 1/4 டீஸ்பூன்,
வறுத்த முந்திரி,
காய்ந்த திராட்சை - தேவைக்கு,
சோள மாவு - 1 டீஸ்பூன், பால் - 1/2 லிட்டர்,
ரோஸ் எசென்ஸ் அல்லது பன்னீர் - சிறிது.

எப்படிச் செய்வது?

பாஸ்தாவை தண்ணீரில் வேகவைத்து வடித்துக் கொள்ளவும். பின்பு அதன் மேல் ஐஸ் தண்ணீர் ஊற்றி அலசவும். அப்பொழுது பாஸ்தா ஒன்றோடு ஒன்று ஒட்டிக் கொள்ளாது. பாத்திரத்தில் பாலை ஊற்றி காய்ச்சி அதில் வெந்த பாஸ்தா, ஏலப்பொடி, சர்க்கரை சேர்த்து கலந்து விடவும். சோள மாவை சிறிது பாலில் கரைத்து பாஸ்தா கலவையில் சேர்க்கவும். கீர் பதத்திற்கு கொதித்து வந்ததும் இறக்கி ஆறவிட்டு, ரோஸ் எசென்ஸ், முந்திரி, காய்ந்த திராட்சை சேர்த்து அலங்கரித்து ஃப்ரிட்ஜில் வைத்து எடுத்து ஜில்லென்று பரிமாறவும்.