காஸ்தா கசோரி




என்னென்ன தேவை?

மைதா - 1 கப், பேக்கிங் பவுடர் - 1 சிட்டிகை,
எண்ணெய் - 2 டீஸ்பூன்.
ஊறவைத்த பச்சைப் பட்டாணி - 1 கப்,
மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன்,
மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்,
சாட் மசாலா - 1 டீஸ்பூன்,
ஆம்சூர் பொடி - 1 டீஸ்பூன்,
உப்பு - தேவையான அளவு.

எப்படிச் செய்வது?

மைதா, உப்பு, பேக்கிங் பவுடர், எண்ணெய் சேர்த்து பூரி மாவு பதத்திற்கு பிசைந்து கொள்ளவும். ஊற வைத்த பச்சைப்பட்டாணியை மிக்சியில் போட்டு சிறிது கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும். அதனுடன் மிளகாய்த்தூள், மஞ்சள் தூள், சாட் மசாலாத்தூள், ஆம்சூர் பொடி, உப்பு சேர்த்து கலந்து வைக்கவும். பிசைந்த மாவை சின்னச் சின்ன பூரிகளாக திரட்டி அதனுள் பச்சைப்பட்டாணி பூரணத்தை வைத்து மூடி வடைபோல் லேசாக தட்டி சூடான எண்ணெயில் பொரித் தெடுத்து இனிப்பு சட்னி, காரச் சட்னியுடன் பரிமாறவும்.