மிட்டாய் காஜா




என்னென்ன தேவை?

மைதா - 3/4 கப்,
வெல்லம் - 1/4 கப்,
ஜாதிக்காய் அல்லது ஏலப்பொடி - 1/4 டீஸ்பூன்,
நெய் - 1/2 டேபிள்ஸ்பூன்,
பொரிக்க எண்ணெய் - தேவைக்கு,
மேலே தடவ வனஸ்பதியும்,
மைதாவும் கலந்த கலவை - சிறிது.

எப்படிச் செய்வது?

வெல்லத்தை சிறிது தண்ணீரில் கரைத்து அடுப்பில் வைத்து கொதிக்க விட்டு வடிகட்டவும். மைதாவில், ஏலப்பொடி, நெய் கலந்து வெல்லத் தண்ணீர் ஊற்றி பூரி மாவு பதத்திற்கு பிசைந்து கொள்ளவும். நெல்லிக்காய் அளவு மாவு எடுத்து சின்னச் சின்ன பூரிகளாக திரட்டி மேலே முள் கரண்டியால் குத்தி அதன்மேல் வனஸ்பதி, மைதா குழைத்ததை தடவி இரண்டாக மடித்து சூடான எண்ணெயில் பொரித்தெடுத்து பரிமாறவும்.

குறிப்பு: மடித்த பூரிகளை ஒரு துணியின் மேல் 1 மணி நேரம் காயவிட்டு பொரித்தால் இன்னும் அதிகமாக கரகரப்பாக இருக்கும்.