பாம்பே லக்டி




என்னென்ன தேவை?

மைதா - 3/4 கப்,
பொடித்த சர்க்கரை - 1/4 கப்,
ஆப்ப சோடா - 1 சிட்டிகை,
வனஸ்பதி - 1 டீஸ்பூன்,
தண்ணீர் - தேவைக்கு.

எப்படிச் செய்வது?

பாத்திரத்தில் வனஸ்பதி, ஆப்ப சோடா சேர்த்து விரல்களால் நுரைக்க தேய்க்கவும். அதனுடன் மைதா, சர்க்கரைத்தூள் கலந்து தண்ணீர் தெளித்து பூரி மாவு பதத்திற்கு பிசைந்து 1/4 இன்ச் கனத்திற்கு சதுரமாக தட்டி சிறு சிறு துண்டுகளாக வெட்டி சூடான எண்ணெயில் பொரித்தெடுத்து பரிமாறவும்.