பானிபூரி




என்னென்ன தேவை?

ரவை - 1/2 கப்,
மைதா - 1½ டேபிள்ஸ்பூன்,
பேக்கிங் பவுடர் - 1 சிட்டிகை,
உப்பு, பொரிக்க எண்ணெய் - தேவைக்கு.

ஸ்டஃப்டு...

வேகவைத்த உருளைக்கிழங்கு -2-3, வேகவைத்த கொண்டைக் கடலை - 1/4 கப், மிளகாய்த்தூள் - 1/2 டீஸ்பூன், உப்பு - தேவைக்கு.

பானி...
புதினா - 1 கட்டு, கொத்தமல்லி - சிறிது, பச்சைமிளகாய் - 2, வெல்லம் - 1 டேபிள்ஸ்பூன், கருப்பு உப்பு - 1 டீஸ்பூன், வறுத்த சீரகப்பொடி - 1 டீஸ்பூன், மாங்காய் பொடி - 1 டேபிள்ஸ்பூன்.

எப்படிச் செய்வது?

பானிக்கு...
கொத்தமல்லி, புதினாவை அரைத்து வடிகட்டி, தேவையான தண்ணீர் சேர்த்து மற்ற பொருட்கள் அனைத்தையும் சேர்த்து கலந்து வைத்துக் கொள்ளவும்.

ஸ்டஃப்பிற்கு...
மசித்த உருளைக்கிழங்கு, கொண்டைக்கடலை, மிளகாய்த் தூள், உப்பு சேர்த்து கலந்து வைத்துக் கொள்ளவும்.

பூரி செய்ய...
பூரிக்கு கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து தண்ணீர் விட்டு பிசைந்து, அதை சின்னச் சின்ன பூரிகளாக இட்டு சூடான எண்ணெயில் பொரித்தெடுத்து வைக்கவும்.

பரிமாறும் முறை...
பொரித்த பூரியில் நடுவில் ஓட்டை போட்டு சிறிது ஸ்டஃப்டு வைத்து, சிறிது பானி ஊற்றி பரிமாறவும்.