கார்ன் வெஜ் - பனீர் லாலிபாப்



என்னென்ன தேவை?

துருவிய பனீர்-  1/4 கிலோ,
ஸ்வீட் கார்ன் - 1/2 கப்,
பொடியாக நறுக்கிய கேரட் - 1/2 கப்,
பச்சைப் பட்டாணி - 1/2 கப்,
பொடியாக நறுக்கிய இஞ்சி - 2 டீஸ்பூன்,
பொடியாக நறுக்கிய வெங்காயம் - 2 டேபிள் ஸ்பூன்,
பச்சை மிளகாய் - 2,
வேக வைத்த சர்க்கரை வள்ளிக் கிழங்கு -  2,
வேக வைத்த உருளைக் கிழங்கு - 1,
கரம் மசாலா - 1 டீஸ்பூன்,
மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன்,
சாட் மசாலா - 1 டீஸ்பூன்,
பொடியாக நறுக்கிய கொத்தமல்லி - 2 டீஸ்பூன்,
பேபி கார்ன்  - 1/2 கப்,
கார்ன் ஃப்ளார் - 1/4 கப்,
எண்ணெய் - 1/2 கப்,
உப்பு - தேவையான அளவு.

எப்படிச் செய்வது?

ஸ்வீட் கார்ன், கேரட், பச்சைப் பட்டாணியை வேக வைக்கவும். அத்துடன் வேக வைத்த கிழங்குகள், பனீர், இஞ்சி, வெங்காயம், கொத்தமல்லி, பச்சை மிளகாய், கரம் மசாலா, மிளகாய் தூள், சாட் மசாலா, பேபி கார்ன், கார்ன் ஃப்ளார், உப்பு சேர்த்து பிசைந்து உருண்டைகளாக உருட்டவும். இவற்றை எண்ணெயில் பொன்னிறமாக பொரித் தெடுத்துப் பரிமாறவும்.