பனீர் கேனப்ஸ்






என்னென்ன தேவை?

பனீர் - 150 கிராம்,
ஸ்வீட் கார்ன் -  1/2 கப்,
குடை மிளகாய் - 1/2 கப்,
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்,
கேனப்ஸ் கப் - 10 பீஸ் (வேஃபர் பிஸ்கெட் மாதிரி இருக்கும்),
எண்ணெய் -  1 டீஸ்பூன்,
கொத்தமல்லி - சிறிது,
உப்பு  - தேவைக்கு,
சீஸ் - சிறிது.

எப்படிச் செய்வது?


பனீரை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். அத்துடன் உப்பு, ஸ்வீட் கார்ன், பொடியாக நறுக்கிய குடைமிளகாய், எண்ணெய், கொத்தமல்லி இலை சேர்த்து நன்றாகப் பிரட்டிக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் ஊற்றி கேனப்ஸ் கப்களை பொன்னிறமாக (போட்ட உடனே) வறுத்து எடுத்து, அதன் மீது பனீர் கலவையை 1 1/2 டீஸ்பூன் நிரப்பி, மிளகாய் தூள் தூவி, சீஸ் துருவல் சேர்த்துப் பரிமாறவும்.