வான்டன்ஸ் - பனீர் சூப்



என்னென்ன தேவை?

மைதா   - 1 கப்,
ஆலிவ் ஆயில்  - 1 டேபிள்ஸ்பூன்,
மிளகுத் தூள்  - 1 டீஸ்பூன்,
தண்ணீர் -  1/2 கப்,
உப்பு - தேவைக்கு.

ஸ்டஃப்பிங்குக்கு...

பனீர் - 1/2 கப்,
மிளகுத் தூள் - 1 டீஸ்பூன்,
உப்பு  - தேவைக்கு,
பாலக் கீரை - 1/2 கப்.

சூப் செய்ய...

ஸ்டாக் வாட்டர் -  6 கப்,
பொடியாக நறுக்கிய கேரட், பீன்ஸ், கோஸ் - 1/2 கப்,
கார்ன் ஃப்ளோர்  1 - டேபிள்ஸ்பூன்,
மிளகுத் தூள் - 1 டீஸ்பூன்,
வெண்ணெய் -    1 டீஸ்பூன்,
பொடியாக நறுக்கிய பூண்டு - 1 டீஸ்பூன்,
உப்பு  தேவைக்கு.

எப்படிச் செய்வது?

வான்டன்ஸ் செய்ய முதலில் மைதா, ஆலிவ் ஆயில், மிளகுத் தூள், தண்ணீர் சேர்த்து கெட்டியாக பிசைந்து கொள்ளவும். ஸ்டஃப்பிங் செய்ய முதலில் பனீரை துருவி வைத்துக் கொள்ளவும். அத்துடன் நறுக்கிய பாலக்கீரை, உப்பு, மிளகுத் தூள் சேர்த்து வைக்கவும்.வான்டன்ஸை சதுரமாக திரட்டி, நடுவில் ஸ்டஃப்பிங்கை வைக்கவும். சதுரப்
பகுதியில் வலதுபுற மேல் முனையையும் இடதுபுற கீழ் முனையையும் மடிக்கவும். பிறகு இடதுபுற மேல் முனையையும் வலதுபுற கீழ் முனையையும் மடிக்கவும். அடுப்பில் பாத்திரத்தை காய வைத்து  வான்டன்ஸை போட்டு, தண்ணீர் வற்றும் வரை சுருள வேக வைக்க வேண்டும்.

பாத்திரத்தை நன்கு காய வைத்து வெண்ணெயை போடவும். அது நன்கு உருகியதும் பூண்டைப் போட்டு வதக்கி, மீதமுள்ள காய் கலவையைச் சேர்த்து வதக்கவும். அதில் கார்ன் ஃப்ளோரை கலந்து நன்கு வதக்கவும். இறக்கும் முன் ஸ்டாக் வாட்டரை ஊற்றி 15 நிமிடங்கள் கொதிக்கவிடவும். அதில் வான்டன்ஸை போட்டு 5 நிமிடங்கள் கொதிக்க விட்டு பரிமாறும் போது தேவையான உப்பு, மிளகுத் தூள் சேர்க்கவும்.