கிரேப்ஸ் - பனீர் டிக்கா



என்னென்ன தேவை?

பனீர் -  1/4 கிலோ,
கருப்பு திராட்சை -  1 கப்,
கருப்பு உப்பு  - தேவையான அளவு,
கடலை மாவு -  2 டீஸ்பூன்,
வெள்ளை மிளகுத் தூள் - 1/2 டீஸ்பூன்,
மாங்காய் பவுடர் -  1/2 டீஸ்பூன் (ஆம்சூர் பவுடர்),
 ஃப்ரெஷ் க்ரீம் - 1 கப்,
பால் -  1 டீஸ்பூன்,
வெல்லம் -  1/2 கப்,
எலுமிச்சைச்சாறு -  1 டீஸ்பூன்,
சாட் மசாலா - 1 டீஸ்பூன்,
குடை மிளகாய் - 2,
தக்காளி - 2,
எண்ணெய் - சிறிது,
உப்பு  - தேவைக்கு.

எப்படிச் செய்வது?

பனீரை சதுரமாக வெட்டிக் கொள்ளவும். 1/2 கப் திராட்சை பழத்தை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். அத்துடன் கருப்பு உப்பு, சாட் மசாலா, உப்பு, வெல்லம் சேர்த்து மசித்துக் கொள்ளவும். பாத்திரத்தை அடுப்பில் வைத்து அதில் திராட்சைக் கலவையை கொட்டி 1/4 டம்ளர் தண்ணீர் ஊற்றி நன்கு கொதிக்க விட்டு இறக்கவும். அதை பனீர் மேல் தடவி, இன்னொரு பனீர் துண்டால் மூடவும்.

 ஒரு கப்பில் கடலை மாவு, வெள்ளை மிளகுத் தூள், மாங்காய் பவுடர், உப்பு, பால், ஃப்ரெஷ் க்ரீம், எலுமிச்சைச்சாறு ஊற்றி கெட்டியாக கரைத்து வைத்துக் கொள்ளவும். பனீர் துண்டுகளை  கடலை மாவு கலவையில் நனைத்து எண்ணெயில் பொரிக்கவும் அல்லது  கிரில் டோஸ்டரில் சுட்டு குச்சியில் குடை மிளகாய், தக்காளி, பனீர், திராட்சை துண்டுகளை வரிசையாக சொருகிப் பரிமாறவும்.