பனீர் பீட்சா



என்னென்ன தேவை?

பனீர் - 1/4 கிலோ,
பீட்சா பேஸ் - 4 பீஸ்,
மக்ரோனி - 150 கிராம்,
மிளகுத் தூள்  - அரை டீஸ்பூன்,
மைதா - 2 டேபிள்ஸ்பூன்,
பால் - 2 கப்,
குடை மிளகாய்(மஞ்சள், சிவப்பு, பச்சை தலா 1 கப் வீதம்) - 3 கப்,
நறுக்கிய பூண்டு - 1 டீஸ்பூன்,
தக்காளி - 2 ஸ்லைஸ்,
வெங்காயம் - 2 ஸ்லைஸ்,
பீட்சா பவுடர்  - 2 டேபிள்ஸ்பூன்,
தக்காளி சாஸ், சோயா சாஸ், சீஸ் - தேவைக்கு,
வெண்ணெய் - 2 டீஸ்பூன்,
உப்பு - தேவைக்கு.

எப்படிச் செய்வது?


மக்ரோனியை வேக வைத்துக் கொள்ளவும். அதில் மிளகுத் தூள், உப்பு, சீவிய பனீர் சேர்த்துக் கொள்ளவும். கடாயை அடுப்பில் வைத்து அதில் வெண்ணெய் போட்டு உருகியதும், 2 டீஸ்பூன் மைதா மாவை போட்டு நன்கு வறுக்கவும். அதில் பாலை ஊற்றி நன்கு கெட்டியாக வரும் வரை அடுப்பில் வைக்கவும். அந்தக் கலவையில் மக்ரோனி கலவையைச் சேர்க்கவும். சிறிது வெண்ணெயில் வதக்கிய பூண்டையும் அதில் சேர்க்கவும். பீட்சா பேஸ் மீது சோயா சாஸ், தக்காளி சாஸ் இரண்டையும் தடவி அதன் மீது
மக்ரோனி கலவையை நிரப்பவும். பிறகு தக்காளி, வெங்காயம், குடைமிளகாய் ஸ்லைஸ்களை பரப்பி, அதன் மீது சீஸ் துருவலையும் பீட்சா பவுடரையும்  தூவவும். பிறகு மைக்ரோவேவ் அவனில் வைத்து சுட்டு எடுத்துப் பரிமாறவும். சீஸ் உருகும் வரை அவனில் வைத்திருக்கவும்.