பனீர்-ஆப்பிள்-பைனாப்பிள்சூப்




என்னென்ன தேவை?

ஆப்பிள் - 4 துண்டுகள்,
பைனாப்பிள்  - 4 துண்டுகள்,
ஸ்டாக் வாட்டர்  - 6 கப்,
லீக்ஸ் செலரி - 4 இதழ்கள்,
துளசி - 2 இதழ்கள்,
பூண்டு விழுது  - 1 டீஸ்பூன்,
வெண்ணெய் - 1 டீஸ்பூன்,
கார்ன் ஃப்ளோர் - 1 டீஸ்பூன்,
பால் -  1/2 கப்,
மிளகுத் தூள் - 1 டீஸ்பூன்,
உப்பு - தேவைக்கு,
பனீர் - 2 துண்டுகள்.

எப்படிச் செய்வது?


அடுப்பில் பாத்திரத்தை வைத்து காய்ந்ததும் வெண்ணெய் போட்டு உருக்கவும். அத்துடன் நறுக்கிய லீக்ஸ் செலரி, பூண்டு, துளசி இலைகளையும், 3 ஆப்பிள் துண்டுகள், 3 பைனாப்பிள் துண்டுகளைப் போட்டு நன்கு வதக்கவும். அதன் மீது கார்ன் ஃப்ளோர் மாவைப் போட்டு மேலும் வதக்கவும். பிறகு பனீர் துண்டுகளை போட்டு, ஸ்டாக் வாட்டர் முழுவதையும் ஊற்றி நன்கு கொதிக்க விடவும். மீதமுள்ள 2 துண்டு பழங்களில் ஜூஸ் எடுத்து, அதைக் கலவையில் ஊற்றி கொதிக்கவிடவும். அடுப்பை சிறு தணலில் வைத்து பாலைச் சேர்த்து நன்கு கொதிக்க விட்டு அடுப்பை அணைக்கவும். பரிமாறும்போது உப்பு, மிளகுத் தூள் சேர்த்துக் கொள்ளவும்.