ஹரியாணி பனீர் டிக்கா



என்னென்ன தேவை?

பனீர் -  1/4 கிலோ,
இஞ்சி, பூண்டு விழுது -  1 டீஸ்பூன்,
கொத்தமல்லி, புதினா -  சிறிதளவு,
பச்சை மிளகாய் -  3,
மஞ்சள் தூள் -  ஒரு சிட்டிகை,
சாட் மசாலா -  1/2 டீஸ்பூன்,
எண்ணெய் -  1/2 கப்,
உப்பு  - தேவைக்கு.

எப்படிச் செய்வது?

பனீரை சதுர சதுரமாக வெட்டிக் கொள்ளவும். இஞ்சி, பூண்டு விழுது, கொத்தமல்லி, புதினா, பச்சை மிளகாய், மஞ்சள் தூள், சாட் மசாலா, உப்பு அனைத்தையும் சேர்த்து தண்ணீர் இல்லாமல் நன்கு மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும். அக் கலவையை பனீர் துண்டுகள் மீது தடவி கிரில் தவாவில்  எண்ணெய் ஊற்றி பொன்னிறமாக சுட்டுப் பரிமாறவும்.