பனீர் - லோட்டஸ் ஸ்டெம் கபாப்



என்னென்ன தேவை?

லோட்டஸ் ஸ்டெம் (தாமரை தண்டு) - 1/4 கிலோ,
வேக வைத்த உருளைக்கிழங்கு  - 3,
பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய்  - 4,
பொடியாக நறுக்கிய இஞ்சி - 1 துண்டு,
சாட் மசாலா - 2 டீஸ்பூன்,
கரம் மசாலா - 1 டீஸ்பூன்,
பொடியாக நறுக்கிய கொத்தமல்லி  - 1 டீஸ்பூன்,
கடலை மாவு  - 2 டீஸ்பூன்,
துருவிய பனீர் - 1/2 கப்,
எலுமிச்சைச்சாறு  - 1 டீஸ்பூன்,
உப்பு  - தேவைக்கு,
எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு.

எப்படிச் செய்வது?

லோட்டஸ் ஸ்டெம்மை வேக வைத்து நறுக்கிக் கொள்ளவும். வேக வைத்த உருளைக்கிழங்கை பிசைந்து, அத்துடன் லோட்டஸ் ஸ்டெம், பச்சை மிளகாய், இஞ்சி, சாட் மசாலா, கரம் மசாலா, கொத்தமல்லி இலை, கடலை மாவு, எலுமிச்சைச்சாறு, உப்பு, பனீர் சேர்த்து நன்கு பிசையவும். இந்தக் கலவையை நீளவாக்கில் உருட்டிக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் இந்த நீள வடிவான உருண்டைகளை பொன்னிறமாக பொரித்து எடுத்து, குச்சியில் சொருகி புதினா சட்னி உடன் பரிமாறவும்.