பலாப்பழம் - பனீர் கட்லெட்



என்னென்ன தேவை?

பலாப்பழம்  - 1/4 கிலோ,
கடலை மாவு  - 1/2 கப்,
ஏலக்காய் - 3,
லவங்கம்   -3,
இஞ்சி - 1 டீஸ்பூன்,
பிரெட் ஸ்லைஸ் - 4,
பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் - 3,
மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன்,
மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்,
நறுக்கிய வெங்காயம் - 1/2 கப்,
நறுக்கிய கொத்தமல்லி - 1/2 கப்,
சாட் மசாலா - 1/2 டீஸ்பூன்,
எண்ணெய் - 1/2 கப்,
உப்பு - தேவையான அளவு,
துருவிய பனீர் - 1/2 கப்.

எப்படிச் செய்வது?


பலாப் பழத்தை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். அத்துடன் பனீர், கடலை மாவு, சாட் மசாலா, உப்பு, மிளகாய் தூள், மஞ்சள் தூள், இஞ்சி, வெங்காயம், பச்சை மிளகாய், கொத்தமல்லி சேர்த்து ஏலக்காய், லவங்கத்தைத் தட்டிப் போடவும். பிரெட் துண்டுகளை நீரில் போட்டு நன்கு பிழிந்து, பலாப் பழக் கலவையில் சேர்த்து கட்லெட் பதத்துக்குப் பிசையவும். கலவையை கட்லெட் ஷேப்பில் செய்து எண்ணெயில் பொரித்து தக்காளி சாஸுடன் பரிமாறவும்.