கம்பு சுத்தும் Couple Vloggers
படிச்சு முடிச்சு நான் டாக்டராகப் போறேன், இஞ்சினியராகப் போறேன், கலெக்டராகப் போறேன் எனச் சொன்ன காலம் மலையேறியாச்சு. இது யு டியூபர்ஸ் காலம். மொபைல் எடுத்தவுங்க இன்று லட்சாதிபதி. அதுலையும் சோஷியல் மீடியா இன்புளூயன்ஸ் இருந்தால் போதும். சப்ஸ்க்ரைபர்ஸ், வியூவ்வர்ஸ் என பணத்தை லட்சங்களில் அள்ளலாம்.
40 வயதில் நாம் சம்பாதித்ததை 18 வயது இளைஞர்கள் மொபைலை கையில் வைத்துக்கொண்டு அசால்டாக சம்பாதிக்கிறார்கள். அதிலும் உங்களுக்கான வியூவர்ஸ் மற்றும் சப்ஸ்க்ரைபர்ஸ் லண்டன், அமெரிக்கா, ஆஸ்திரேலியா போன்ற மேலை நாடுகளில் இருந்தால் உங்கள் வருமானம் பல மடங்குதான் போங்க.
ஒப்பீட்டளவில் இந்த ஆண்டு கபுள் விலாக்கர்ஸ் லிஸ்ட்டே அதிகம். அதிலும் குறிப்பாக சப்ஸ்க்ரைபர்ஸ் அதிகம் இருக்கும் சேனலைவிட, சப்ஸ்க்ரைபர்ஸ் குறைவாக உள்ள சேனல்கள் பலவற்றுக்கும் வியூவ்ஸ் அதிகம் இருக்கிறது. சப்ஸ்க்ரைபர்ஸ் மற்றும் வியூவ்ஸ்களை அதிகம் அள்ளும் முதல் பத்து இடங்களில் உள்ள கப்பிள்ஸ் சேனல்தான் இதில் நம்ம டார்கெட். வாங்க போகலாம்...
வாசகர் பகுதி
‘மஞ்சள்’ மகிமை!
மஞ்சளின் மகிமையை நமது முன்னோர்கள் அறிந்து நமக்கு வழிகாட்டி உள்ளனர். உடலுக்கு மஞ்சள் தரும் பலன்கள் எத்தனை எத்தனை என்பதை அளவிட முடியாது. சமையலில் பருப்பு, காய்கறி வகைகளை வேகவைக்கும் போது மஞ்சள் தூள் சேர்ப்பதின் நோக்கமே வயிற்றில் புண் வராமல் காக்கவும், உடல் உறுப்புகளுக்கு எந்த வித தீமையும் வராமல் தடுக்கத்தான்.
தை மாதத்தில் கிடைக்கும் மஞ்சள் கிழங்கை உரசி, பூசி குளிக்கும் போது அதன் மணமும், குணமும் சொல்லில் அடங்காது. எந்த ஒரு மங்கல நிகழ்ச்சிக்கும் முதலிடம் தரப்படுவது மஞ்சளுக்கே. மங்கல பூஜைகளில் முதலில் மஞ்சளை பிள்ளையாராக பிடித்து வைப்பார்கள். தொடர்ந்து அட்சதைப் பொருளிலும், ஆலம் கரைத்து சுற்றவும் மஞ்சள் சேர்க்கப்படுகிறது. அம்மன் வழிபாட்டிலும் முதலிடம் மஞ்சளுக்குத்தான்.
மஞ்சளில் விரலி மஞ்சள், கறி மஞ்சள், குண்டு மஞ்சள், கஸ்தூரி மஞ்சள் என பலவகைகள் உள்ளன. அதைப் பயன்படுத்துவதால் ஏற்படும் பயன்கள் ஒன்றுதான்.
*கஸ்தூரி மஞ்சள், பாசிப்பயறு சேர்த்து அரைத்த மாவில் தயிர் அல்லது பால் விட்டுக் குழைத்து பூசி குளித்து வந்தால் சருமம் பளபளவென்று அழகு கூடும்.
*மஞ்சளை உடைத்துப் போட்டு, அதோடு தனியாவையும் சேர்த்து காய்ச்சிய தண்ணீரைக் குடிப்பதால் அஜீரணம், வயிற்றுப் போக்கு உடனே குணமாகும்.
*மஞ்சள் தூளோடு, அரிசி மாவையும் தண்ணீரில் கலந்து விளக்கெண்ணெய் சேர்த்து கட்டிகளின் மீது வைத்துக் கட்டினால் கட்டி உடைந்து குணமாகும்.
*சிறு மஞ்சள் துண்டு ஒன்றை வேப்ப எண்ணெயில் தோய்த்து, நெருப்பில் எரிய வைத்து புகையை முகர்ந்தால் தலைவலி நீங்கும்.
*கொப்புளங்கள் மீது மஞ்சள் தூள், தேன் கலந்து தடவினால் கொப்புளம் வடிந்து, குணமாகி விடும்.
- எஸ்.ஜெயப்பிரியா, மதுரை.
மகேஸ்வரி நாகராஜன்
|