குதூகலிக்கும் பொங்கல் சில்க்ஸ்
தீபாவளியை அடுத்து நாம் எல்லாரும் பிரமாண்டமாக கொண்டாடுவது பொங்கல் திருநாள். அதிகாலை எழுந்து, பொங்கல் பானையிட்டு, புத்தாடை அணிந்து, ‘பொங்கலோ பொங்கல்’ என்று இந்தப் பண்டிகையினை நாம் அனைவரும் குடும்பத்துடன் சந்தோஷமாக கொண்டாடுவது வழக்கம். கிராமத்தில் விசேஷமாக கொண்டாடப்பட்டாலும், நகர மக்களும் தைத் திருநாளை மிகவும் ஆனந்தமாக வழிபட்டு வருகிறார்கள். இந்த சந்தோஷத்தோடு மேலும் நம்மை குதூகலிக்க செய்துள்ளது ‘சென்னை சில்க்ஸ்’ பட்டாடை.
தமிழகத்தில் அனைத்து முக்கிய நகரங்களில் அமைந்துள்ள சென்னை சில்க்ஸ் பொங்கலை முன்னிட்டு தங்கள் ஆடைகளின் சமுத்திரத்தில் இந்தாண்டு பொங்கல் திருநாளை விமர்சையாக கொண்டாடுகிறது.ஆடைகளின் சமுத்திரம்... பொங்கல் தமிழ்நாட்டில் மட்டுமில்லை... வட மாநிலங்களிலும் சங்கராந்தி என்று விமர்சையாக கொண்டாடப்படுகிறது. இந்த திருநாளை வரவேற்க சென்னை சில்க்ஸ் இந்தியாவின் அனைத்து மாநிலங்களில் உள்ள சிறப்பு வாய்ந்த ஆடைகளை விற்பனைக்கு வைத்துள்ளனர். ஒவ்வொரு மாநிலத்திற்கும் தனிப்பட்ட சிறப்பு உடைகள் இருக்கும். அந்த உடைகளை மிகவும் கலைநயத்தோட தேர்வு செய்து, அதனை அந்த மாநிலத்தில் இருந்தே வரவழைத்துள்ளனர்.
சென்னை சில்க்ஸ் பட்டாடை கடைக்குள் நுழைந்தால் ேபாதும், அங்கு அனைத்து மாநிலங்களின் உடைகள் நம் கண்களை பறிக்கச் செய்கின்றன. விரும்பிய ஆடைகளை விரும்பும் வண்ணத்தில் வாங்கி மகிழலாம்.குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை 90s மற்றும் 2k கிட்ஸ் என அனைவருக்குமான லேட்டஸ்ட் டிசைன் உடைகள் இங்கு கொட்டிக் கிடக்கின்றன. ஒவ்ெவாரு டிசைன் உடைகளை பார்க்கும் போதும், எதை எடுப்பது எதை விடுவது என்று மக்கள் திணறும் வண்ணம் அங்கு ஆடைகள் நிறைந்துள்ளன. இந்த பொங்கலை ‘சென்னை சில்க்ஸ்’ உடன் இணைந்து கொண்டாடுவோம்.
|