ப்ரியங்களுடன்...
=“ஆரோக்கியமான குடும்பம் ஆரோக்கிய சமூகம்” படித்தேன். தனக்கு கிடைத்த இந்த அழகான வாழ்க்கை ஆரோக்கியமற்ற சூழ்நிலையில் வளர்ந்தவர்களுக்கு கிடைக்க வேண்டும் என்று கூறினாரே... என்ன ஒரு மனித நேயம். இந்த மனசு யாருக்கு வரும். பாராட்டுக்கள். - வண்ணை கணேசன், சென்னை.
=15 வருட காலமாக “மைக்ரேன் எனும் ஒற்றத் தலைவலியால்” படாத கஷ்டங்களை எதிர் நோக்கி வரும் எனக்கு ஆறுதல் சொல்லும் வகையில் மைக்ரேன் தலைவலி கட்டுரை அருமருந்தாக அமைந்தது. - என். புவனாநாகராஜன், செம்பனார்கோவில்.
=“அகந்தையை நீக்கி ஞான ஒளியை அளிக்கும் ஐங்கரன்…!” பற்றிய செய்திகளை படித்து பரவசம் அடைந்தேன். விநாயகர் பற்றி வாசகர் பகுதிகளில் இடம் பெற்ற செய்திகளும் அருமை!! - எல். ரவி, தஞ்சாவூர்.
=அரசு நிர்வாகத்திலும் நாட்டியத்திலும் அசத்தும் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் திருமதி கவிதா ராமு அவர்களின் நடனத்திறமை வியக்கவைக்கிறது. நாட்டியப் பேரொளி பத்மினியை போன்று ஜூனியர் பத்மினியாகத் திகழ்கிறார்! - இரா. செல்லம், தூத்துக்குடி.
=சிறப்பு ஆசிரியர் ஜெயந்தி அவர்கள் தன்னுடைய ெசாந்த வாழ்க்கையை சிறப்பு மாணவ-மாணவிகளுக்கு அர்ப்பணித்துள்ளார். அவரை இருகரம் கூப்பி பாராட்டுகிறோம். - தா. சைமன் தேவா, விநாயகபுரம்.
=‘விவசாயம் செய்தால் ‘ஐ.ஏ.எஸ்’ பயிற்சி இலவசம்’ லட்சியம் வசமான சூட்சுமத்தை உணர்த்தியது. மற்றவர்களின் திறமையையும் மேம்படச் செய்யலாம் என்பதும் அறிவுறுத்தப்பட்டது. - எஸ்.வளர்மதி, கன்னியாகுமரி.
=“காதல் கதை சொல்ல வந்தேன்” சிறுகதை மிக அருமை. ஜீவாவை போன்ற ஆசிரியர்கள் பள்ளி மற்றும் கல்லூரிகளில் இருந்தால் பள்ளிக் கூடங்கள் அறிவு வெளி கூடமாக அமையும். - டி. சாந்தி நடராஜன், நாகர்கோவில்.
=வாழ்க்கை+வங்கி= வளம் தொடர் பயனுள்ள தகவல்களை தக்கதோர் தருணத்தில் தந்துள்ளது. வகை வகையான சத்தான முத்தான கொழுக்கட்டைகள் சமைக்க, ருசிக்க ஆர்வம் கூட்டியது. - கவிதா சரவணன், ஸ்ரீரங்கம்.
=பெற்ற குழந்தைகளையே வளர்ப்பதற்கு கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கும் இந்த காலத்தில் 130 நாய்களை தன் குழந்தைகள் போல் வளர்த்து வரும் கலாவின் நன்றிமிக்க செயல் ஆச்சரியத்தின் உச்சிக்கே அழைத்துச் சென்றது. - ஜி. மகாலெட்சுமி, தூத்துக்குடி.
= ‘வானத்தைப் போல’ தொடரில் துளசியாக நடிக்கும் மான்யா, தனது நட்பு வட்டாரத்தைப் பற்றி சொல்லியிருந்தது ரசனையாக இருந்தது. “உண்மையான நட்பை பெற்றோர்களும் மதிப்பாங்க” என்று மான்யா கூறியிருந்தது நூற்றுக்கு நூறு உண்மையான வார்த்தைகள்தான். - ஏ. இந்திராகாந்தி, கோயம்புத்தூர்.
அட்டைப்படம்: அதிதி ஷங்கர், படங்கள்: கிரண் ஷா
|