தோழியருக்கான நட்சத்திர பலன்கள் செப்டம்பர் 1 முதல் 15 வரை



பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோசியர்

அஸ்வினி: ரகசியங்களை காக்கும் உங்களுக்கு இந்த காலகட்டத்தில் எதிலும் நிதானமாக செயல்படுவது நன்மை தரும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. பணவரத்து தாமதமாக வந்து சேரும். எந்த வாக்குறுதியும் கொடுக்கும் முன் யோசித்து செயல்படுவது நல்லது. மற்றவர்களின் செயல்கள் கோபத்தை தூண்டுவதாக இருக்கலாம். உத்தியோகத்தில் இருப்பவர்கள் அவசரப்படாமல் நிதானமாக பணிகளை கவனிப்பது நல்லது. குடும்பத்தில் சிறுசிறு மனவருத்தங்கள் ஏற்படும் வகையில் சூழ்நிலை இருக்கும். கணவன், மனைவிக்கிடையில் வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. பிள்ளைகள் முன்னேற்றத்தில் தடை தாமதம் ஏற்படலாம் கவனம் தேவை. பொருட்களை கவனமாக பாதுகாப்பது நல்லது. குமரனை வணங்கி வர அனைத்து நலன்களும் வளங்களும் உண்டாகும்.

பரணி: எதிர்நீச்சல் போட்டு முன்னேறும் தன்மை உடைய உங்களுக்கு இந்த காலகட்டத்தில் நண்பர்கள், உறவினர்களிடம் வீண் மனஸ்தாபங்கள் ஏற்படலாம். நீண்ட நாட்களாக வாங்க வேண்டும் என்று எண்ணிய பொருட்களை வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். எதிலும் அவசரம் காண்பிப்பதை தவிர்ப்பது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் திட்டமிட்டு காரியங்களை செய்து எதிர்பார்த்த வெற்றியை அடைவார்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி கூடும். கணவன், மனைவிக்கிடையில் நெருக்கம் உண்டாகும். பிள்ளைகளுக்காக பாடுபடுவீர்கள். சுபச்செலவுகள் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. வாகனங்களை இயக்கும் போது நிதானம் தேவை. மஹாலக்ஷ்மியை வணங்கி வருவது பொருளாதார நிலையை உயர்த்தும்.

கிருத்திகை: தோல்வியை வெற்றிப்படிகளாக மாற்றும் வித்தை அறிந்த உங்களுக்கு இந்த காலகட்டத்தில் வீண் மனக்கவலை விலகும். கனவு தொல்லைகள் நீங்கும். பணவரத்து திருப்தி தரும். நண்பர்கள் மூலம் உதவி கிடைக்கும். ஆடம்பர செலவுகள் ஏற்படும். கோபத்தை கட்டுப்படுத்துவது நன்மை தரும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் கடுமையாக உழைக்க வேண்டி இருக்கும். அதனால் களைப்பு ஏற்படலாம். குடும்பத்தில் இருந்த குழப்பங்கள் நீங்கி எல்லோரும் உங்களது வார்த்தைக்கு மதிப்பு தருவார்கள். ஆனால் யாரிடமும் நிதானமாக பேசுவது நல்லது. கணவன், மனைவிக்கிடையே சகஜநிலை நீடிக்கும். பிள்ளைகள் மூலம் மனமகிழ்ச்சி ஏற்படும். கடுமையாக உழைக்க வேண்டி இருக்கும். பெருமாளை சேவித்து வர மனக்குழப்பம் நீங்கும். செல்வ நிலை உயரும்.

ரோகிணி: இந்த காலகட்டத்தில் எல்லா முயற்சிகளும், காரியங்களும் சாதகமான பலன் தரும். பணவரத்து அதிகரிக்கும். கடினமான வேலைகளையும் எளிதாக செய்து முடிக்கும் திறமை உண்டாகும். மனதில் இருந்த பயம் நீங்கும். வெளியூர், வெளிநாடு பயணங்கள் செல்ல எடுக்கும் முயற்சிகள் சாதகமாக முடியும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியான நிலை காணப்படும். சுப காரியங்கள் நடக்கலாம். சகோதரர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். கணவன்-மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். சந்தோஷமாக காணப்படுவார்கள். குழந்தைகள் மூலம் பெருமை கிடைக்கும். பிரத்தியங்கரா தேவியை வணங்கி வர எதிர்ப்புகள் விலகும். மனோ தைரியம் அதிகரிக்கும்.

மிருகசீரிஷம்: இந்த காலகட்டத்தில் எதிலும் கவனமாக இருப்பது நல்லது. காரியங்களில் தடை தாமதம் உண்டாகும். எதிலும் தலையிடாமல் ஒதுங்கி சென்றாலும் மற்றவர்கள் வலிய வந்து உங்களையும் இழுப்பார்கள். வாகனங்களில் செல்லும் போது கவனம் தேவை. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வீண் அலைச்சலும், வேலை பளுவும் ஏற்படலாம். குடும்பத்தில் இருப்பவர்களுடன் அனுசரித்து செல்வது நல்லது. கணவன், மனைவிக்கிடையே விட்டுக் கொடுத்து செல்வது நன்மை தரும். பிள்ளைகளுக்காக அலைய வேண்டி இருக்கும். குடும்பத்திற்காக கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். சிவனை வணங்கிவர காரிய தடைகள் நீங்கும். குடும்பத்தில் அமைதி உண்டாகும்.

திருவாதிரை: அடுத்தவரின் உணர்ச்சிகளை புரிந்து கொண்டு அதற்கேற்றபடி செயல்படும் உங்களுக்கு இந்த காலகட்டத்தில் பொருள்வரத்து அதிகரிக்கும். கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்கள். நண்பர்கள் மூலம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். மற்றவர்களால் கைவிடப்பட்ட காரியத்தை செய்து முடிப்பீர்கள். அரசாங்கம் மூலம் நடக்க வேண்டிய காரியங்கள் அனுகூலமாக நடந்து முடியும். தேவையான பண உதவி கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர் களுக்கு விருப்பமில்லாத இடமாற்றம் உண்டாகலாம். குடும்பத்தில் இருந்த சண்டைகள் நீங்கும். கணவன், மனைவிக்கிடையே இருந்த இடைவெளி குறையும். திருமணம் தொடர்பாக எடுக்கும் முயற்சிகள் கைகூடும். வீட்டிற்கு தேவையான பொருள்களை வாங்கி மகிழ்வீர்கள். பிள்ளைகள் மகிழ்ச்சியாக காணப்படுவார்கள். குலதெய்வத்தை வணங்கி வர எல்லா நலன்களும் உண்டாகும். வாழ்வில் சுபிட்சம் ஏற்படும்.

புனர்பூசம்: இந்த காலகட்டத்தில் காரியங்களில் தடைதாமதம் ஏற்படலாம். பணவரத்து அதிகரித்தாலும் கைக்கு கிடைப்பதில் தாமதம் ஏற்படும். எந்த ஒரு வேலையை செய்யும் போதும் கூடுதல் கவனத்துடன் செய்வது நல்லது. வீடு, வாகனம் மூலம் செலவுகள் ஏற்படலாம். சமூகத்தில் மதிப்பும், மரியாதையும் கூடும். குரு சஞ்சாரத்தால் புதிய தொடர்புகள் மகிழ்ச்சி தருவதாக இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நிர்பந்தமாக இடமாற்றம் அல்லது பணிமாற்றம் இருக்கலாம். உழைப்பு அதிகரிக்கும். குடும்பத்தில் இருந்த குழப்பங்கள் குறையும். கணவன், மனைவி ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து செல்வதன்மூலம் மகிழ்ச்சி உண்டாகும். பிள்ளைகளின் எதிர்கால நலனுக்காக பாடுபடுவீர்கள். கிராம தெய்வத்தை வணங்கி வர குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும்.

பூசம்: இந்த காலகட்டத்தில் எந்த காரியத்தை செய்தாலும் அதில் இருக்கும் தடை தாமதம் விலகும். பணவரத்து குறையும். உடல் சோர்வு ஏற்படும். வீண் பிரச்சனைகள் தலைதூக்கும். நண்பர்கள், உறவினர்களுடன் மனவருத்தம் உண்டாகலாம். பயணங்கள் செல்ல நேரிடும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மாற்றங்கள் உண்டாகும். வேலைப் பளு கூடும். குடும்பத்தில் அடுத்தவர்களால் ஏதேனும் குழப்பம் உண்டாகலாம். கணவன், மனைவிக்கிடையே ஒருவருக்கொருவர் அனுசரித்து செல்வது நல்லது. பிள்ளைகளுக்காக செலவு செய்யவேண்டி இருக்கும். தீ, ஆயுதங்களை கையாளும் போது கவனம் தேவை. உறவினர்களிடம் பேசும் போது கவனமாக பேசுவது நல்லது. நவக்கிரகங்களை வணங்கி வர பிரச்சனைகள் தீரும். பொருள் சேர்க்கை ஏற்படும். மன அமைதி கிடைக்கும்.

ஆயில்யம்: இந்த காலகட்டத்தில் எல்லா காரியங்களிலும் வெற்றி கிடைக்கும். பணவரத்து அதிகரிக்கும். கடன் பிரச்சனை தீரும். தகராறு, வழக்குகளில் சாதகமான போக்கு காணப்படும். நினைத்த காரியத்தை செய்து முடிப்பதில் ஆர்வம் காட்டுவீர்கள். மறைமுக எதிர்ப்புகள் விலகும். கவுரவம் அதிகரிக்கும். மறைமுக நோய் ஏற்படலாம். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலை பளு குறையும். முயற்சிகள் காலதாமதமாக பலன் கொடுக்கும். எதை பற்றியும் கவலைப்படாமல் செயலாற்றுவீர்கள். குடும்பத்தில் இருந்த பிரச்சனைகள் தீரும். திருமண காரியங்கள் கைகூடும். கணவன், மனைவிக்கிடையே இருந்த இடைவெளி குறையும். பிள்ளைகள் உங்கள் சொல்படி நடப்பது மனதுக்கு மகிழ்ச்சியை தரும்.  குரு பகவானை வணங்க எல்லா நன்மைகளும் உண்டாகும்.

மகம்: இந்த காலகட்டத்தில் வாக்குவன்மையால் காரிய அனுகூலம் உண்டாகும். ஆனால் மனதில் ஏதாவது சஞ்சலம் இருந்து கொண்டே இருக்கும். திடீர் பண தேவை ஏற்படலாம். தேவையான நேரத்தில் மற்றவர்களின் உதவி கிடைக்கும். புதிய சொத்து வாங்குவதில் கவனம் செல்லும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேல் அதிகாரிகள் சொல்வதை செய்வதன் மூலம் நன்மை கிடைக்க பெறுவார்கள். குடும்பத்தில் அமைதி ஏற்படும். கணவன், மனைவி ஒருவருக்கொருவர் மனம்விட்டு பேசி எடுக்கும் முடிவுகள் நன்மை தரும். பிள்ளைகள் பற்றிய கவலை நீங்கும். புதிதாக செய்யும் காரியங்களில் கவனம் தேவை. இனிமையான வார்த்தைகளை பேசுவதன் மூலம் மற்றவர் மத்தியில் மதிப்பு கூடும். கேது பகவானை வணங்கி வர கஷ்டங்கள் குறையும். வேலை பளு குறையும்.

பூரம்: அனுபவ அறிவால் காரியங்களில் வெற்றி கொள்ளும் உங்களுக்கு இந்த காலகட்டத்தில் உங்களது செயல்களுக்கு பாராட்டுகள் கிடைக்கப் பெறுவீர்கள். செலவு அதிகரிக்கும். அடுத்தவர் மூலம் மனசங்கடம் உண்டாகும். சிலருக்கு இடமாற்றம் உண்டாகலாம். நண்பர்கள் மூலம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். வாழ்க்கை தரம் உயரும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் அடுத்தவரை நம்பி பொறுப்புகளை ஒப்படைப்பதை தவிர்ப்பது நல்லது. குடும்பத்தில் இருப்பவர்களின் ஒத்துழைப்பால் வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். கணவன், மனைவிக்கிடையில் இருந்த மனவருத்தம் நீங்கும். பிள்ளைகளிடம் அன்பாக நடந்து கொள்வீர்கள். விநாயகப் பெருமானுக்கு தேங்காய் உடைத்து வழிபட எல்லா சிக்கல்களும் தீரும்.

உத்திரம்: வாழ்வில் எதையும் சமாளித்து முன்னேறும் சாமர்த்தியம் மிக்க உங்களுக்கு இந்த காலகட்டத்தில் எதையும் சாதிக்கும் திறமையும், சாமர்த்தியமும் அதிகமாகும். பணவரவு எதிர்பார்த்தபடி இருக்கும். எதிர்ப்புகள் விலகும். புதிய நண்பர்கள் கிடைப்பதுடன் அவர்களால் நன்மையும் உண்டாகும். மரியாதை கூடும். மனதில் துணிச்சல் அதிகரிக்கும். தன்னம்பிக்கையுடன் செயலாற்றுவீர்கள். கடன் தொல்லை குறையும். போட்டிகள் நீங்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த பதவி உயர்வு கிடைக்கும். கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். குடும்பத்தில் இதமான சூழ்நிலை நிலவும். கணவன், மனைவிக்கிடையில் இருந்த கருத்து வேற்றுமை நீங்கி ஒற்றுமை உண்டாகும். எதிர்காலம் பற்றிய சிந்தனை அதிகரிக்கும். உறவினர்கள் மூலம் நன்மை உண்டாகும். ஆஞ்சநேயரை வணங்க உடல் ஆரோக்கியம் உண்டாகும். குடும்ப பிரச்சனைகள் தீரும்.

அஸ்தம்: சொந்த அறிவில் செயல்படும் உங்களுக்கு இந்த காலகட்டத்தில் வீண் கவலை ஏற்பட்டு நீங்கும். செலவு அதிகரிக்கும். எடுத்த காரியத்தை செய்து முடிப்பதில் தாமதம் ஏற்படலாம். அடுத்தவருக்கு உதவ போய் வீண் பிரச்சனையில் சிக்கிக்கொள்ள நேரலாம். புதிய நட்பு உண்டாகலாம். உத்தியோகத்தில் இருப்பவர்கள் சக ஊழியர்களுடன் அனுசரித்து செல்வது நல்லது. பணவரத்து திருப்தி தரும். குடும்பத்தில் நீண்டநாட்களாக இருக்கும் பிரச்சனை தீரும். கணவன்-மனைவிக்கிடையில் இருந்த கருத்து வேற்றுமை நீங்கும். சகோதரர்களிடம் கவனமாக பேசி பழகுவது நல்லது. பிள்ளைகளால் டென்ஷன் ஏற்பட்டு நீங்கும். ஆரோக்கியத்தில் கவனம் தேவை. வாராகி தேவியை வணங்கி வர தொல்லைகள் நீங்கும். நன்மை உண்டாகும்.

சித்திரை: எண்ணியதை எப்பாடுபட்டாவது செயல்படுத்த வேண்டும் என்பதை குறிக்கோளாக கொண்டு செயல்படும் உங்களுக்கு இந்த காலகட்டத்தில் கோபத்தை குறைத்து எதிலும் கவனமாக செயல்படுவது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். சக பணியாளர்களிடம் கவனமாக பழகுவது நல்லது. குடும்பத்தில் திடீர் குழப்பம் ஏற்பட்டு நீங்கும். கணவன், மனைவிக்கிடையே வாக்குவாதம் உண்டாகலாம். கவனம் தேவை. பிள்ளைகள் நலனில் அக்கறை காட்டுவீர்கள். நண்பர்கள், உறவினர்கள் மூலம் நன்மை ஏற்படும். வாழ்வில் முன்னேற்றமடைய கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். துர்க்கை தேவியை வணங்கி வர கடன் பிரச்சனை தீரும். மன அமைதி உண்டாகும்.

சுவாதி: எதையும் சுலபமாக புரிந்து கொள்ளக் கூடிய உங்களுக்கு இந்த காலகட்டத்தில் பதட்ட குணத்தை கைவிடுவது முன்னேற்றத்துக்கு உதவும். ஏதாவது ஒருவகையில் மனக்குழப்பம் ஏற்பட்டு நீங்கும். சாதாரணமாக பேசப்போக அது சண்டையாக மாறலாம் கவனம் தேவை. வேளை தவறி உணவு உண்ண வேண்டி இருக்கும். பொருட்களை கவனமாக பார்த்துக் கொள்வது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் வேலைப் பளு காரணமாக அலைய வேண்டி இருக்கும். குடும்பத்தினருடன் அனுசரித்து செல்வது நல்லது. கணவன்-மனைவிக்கிடையே மனவருத்தம் ஏற்படலாம். அனுசரித்து செல்வது நல்லது. பிள்ளைகளிடம் அன்புடன் பேசுவது நன்மை தரும். சுந்தரகாண்டம் படித்து பெருமாளை வணங்கி வர சகல நன்மைகளும் உண்டாகும். குடும்பத்தில் நிம்மதி ஏற்படும்.

விசாகம்: இந்த காலகட்டத்தில் நன்மை தரும் விஷயங்கள் நடக்கும். பணவரவு கூடும். செய்யும் காரியத்தில் மனதிருப்தி கிடைக்கும். அடுத்தவர்களுக்காக எந்த பொறுப்பையும் ஏற்காமல் இருப்பது நல்லது. மற்றவர்களுக்காக வீண் அலைச்சல், செலவு செய்ய வேண்டி இருக்கும். பணப் பரிவர்த்தனையில் கவனம் தேவை. உத்தியோகத்தில் இருப்பவர்கள் எவ்வளவு உழைத்தாலும் எதிர்பார்த்த பலன் கிடைப்பதில் தாமதம் உண்டாகும். குடும்பத்தில் இருந்த பிரச்சனை தீரும். வாழ்க்கை துணையின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. குடும்பம் சம்பந்தப்பட்ட காரியங்கள் நல்லபடியாக நடக்கும். பிள்ளைகள் நலனுக்காக கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். பணவரத்து கூடும். குருபகவானை வணங்கி வர எதிர்ப்புகள் அகலும். துன்பங்கள் நீங்கும்.

அனுஷம்: இந்த காலகட்டத்தில்  குரு பார்ப்பதால் மனதில் இருந்த டென்ஷன் குறையும். உடல் ஆரோக்கியம் உண்டாகும். விரும்பியபடி காரியங்கள் நடக்கும். நீண்ட தூர தகவல்கள் நல்ல தகவல்களாக இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் ஏற்கனவே செய்த வேலைகளுக்கு இப்போது பாராட்டும் பண உதவியும் கிடைக்க பெறலாம். குடும்பத்தில் இருந்த டென்ஷன் குறைந்து சந்தோஷமான நிலை காணப்படும். கணவன்-மனைவிக்கிடையே மகிழ்ச்சியான உறவு நிலவும். பிள்ளைகளின் நடத்தை மனதுக்கு நிம்மதியை தரும். எதிர்பார்த்த தகவல்கள் நல்ல தகவல்களாக வந்து சேரும். வீண் டென்ஷன் நீங்கும். புதிய நட்புகள் மூலம் உதவி கிடைக்கும். நடராஜப் பெருமானை வணங்கி வர எல்லா பிரச்சனைகளும் நல்ல முடிவுக்கு வரும். மன அமைதி கிடைக்கும்.

கேட்டை: இந்த காலகட்டத்தில் எதிர்பார்த்த நல்ல பலன்கள் வரும். திறமையான பேச்சின் மூலம் காரியங்களை சாதிப்பீர்கள். தெய்வ பிரார்த்தனை மனதுக்கு நிம்மதியையும், ஆறு
தலையும் தரும். சூரியன் சஞ்சாரத்தால் பணவரத்து கூடும். அரசாங்க காரியங்கள் சாதகமாக பலன் தரும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் உற்சாகமாக காணப்படுவார்கள். எடுத்த காரியம் வெற்றி பெறுவதால் மேல் அதிகாரிகளிடம் பாராட்டு கிடைக்கும். குடும்பத்தில் ஒற்றுமை காணப்படும். கணவன்-மனைவிக்கிடையே இருந்த கருத்து வேற்றுமை நீங்கும். பிள்ளைகள் மூலம் மனமகிழ்ச்சி கிடைக்கும். உறவினர்கள், நண்பர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். காரியங்கள் வெற்றி பெறும்.ஆன்மிக எண்ணங்கள் அதிகரிக்கும். ரங்கநாதரை வணங்கி வர காரிய வெற்றி உண்டாகும். செல்வ சேர்க்கை ஏற்படும்.

மூலம்: இந்த காலகட்டத்தில் பணவரவு திருப்தி தரும். ஆனால் வீண் செலவுகளை தவிர்ப்பது நன்மை தரும். எந்த ஒரு வேலையையும் செய்யும் முன் அதில் உள்ள நல்லது கெட்டதை ஆராய்ந்து செய்வது நல்லது. பயன்தராத முயற்சிகளை தவிர்ப்பது நன்மை தரும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் குறிக்கோளற்ற வீண் அலைச்சலை சந்திக்க வேண்டி இருக்கும். குடும்பத்தில் இருப்பவர்களுடன் அனுசரித்து செல்வது நன்மை தரும். கணவன் -மனைவிக்கிடையில் மனம் விட்டு பேசி எடுக்கும் முடிவுகள் நல்ல பலன் தரும். பிள்ளைகளை தட்டிக் கொடுத்து வேலை வாங்குவது நல்லது. உறவினர், நண்பர்களிடம் டென்ஷன் இல்லாமல் பேசுவது நல்லது. பைரவரை வணங்க எல்லா நலன்களும் உண்டாகும். காரிய அனுகூலம் கிடைக்கும்.

பூராடம்: இந்த காலகட்டத்தில் எதிலும் முன்னேற்றம் காண முடியும். எடுத்த காரியத்தை வெற்றிகரமாக செய்து முடிப்பதில் ஆர்வம் காட்டுவீர்கள். வெளியூர் பயணங்கள் சாதகமான பலன் தரும். எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். வளர்ச்சிக்கு தேவையான ஆதரவு கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் புத்திசாதுரியத்தால் அலுவலக வேலைகளை திறமையாக செய்து முடித்து மதிப்பும் மரியாதையும் கிடைக்கப் பெறுவீர்கள். குடும்பத்தில் நிம்மதியான சூழ்நிலை காணப்படும். கணவன், மனைவிக்கிடையே ஒற்றுமை அதிகரிக்கும். பிள்ளைகள் மூலம் பெருமை கிடைக்கும். வீடு, வாகனங்கள் புதுப்பிக்க அல்லது புதிதாக வாங்கும் முயற்சியில் ஈடுபடுவீர்கள். முத்துக்குமரனை வணங்கி வர உடல் ஆரோக்கியம் உண்டாகும். எதிர்ப்புகள் விலகும்.

உத்திராடம்: இந்த காலகட்டத்தில் எந்த இடத்தில் பேசும்போதும் கவனமாக பேசுவது நல்லது. வாக்குறுதிகள் கொடுப்பதை தவிர்ப்பது நன்மை தரும். மனம் தளராமல் இருப்பது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேல் அதிகாரிகள், சக ஊழியர்களிடம் அனுசரித்து நடந்து கொள்வது நல்லது. குடும்ப விஷயத்தில் அந்நிய நபர்களின் தலையீட்டை தவிர்ப்பது நல்லது. கணவன், மனைவி ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து செல்வது மன அமைதியை தரும். வாழ்க்கை துணையின் உடல் நலத்தில் கவனம் தேவை. பிள்ளைகளிடம் அன்பாக பேசுவது நன்மை தரும். எந்த நிலையிலும் மனம் தளராது காரியங்கள் செய்வது வெற்றியை தரும். வாக்குறுதிகளை தவிர்க்கவும். விநாயகப் பெருமானை வணங்கி வர எல்லா காரியங்களும் தடை நீங்கி சாதகமான பலன் தரும்.

திருவோணம்: இந்த காலகட்டத்தில் காரிய அனுகூலம் உண்டாகும். மனதில் தைரியம் அதிகரிக்கும். வீட்டிலும் வெளியிலும் உங்களது செயல்களுக்கு ஆதரவு கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. எதிர்பார்த்த பண உதவி கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் முன்னேற்றம் காண்பார்கள். வேலை தேடுபவர்களுக்கு புதிய வேலை கிடைக்கும்.  குடும்பத்தில் அமைதியான சூழ்நிலை காணப்படும். கணவன், மனைவிக்கிடையில் நெருக்கம் உண்டாகும். வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். பிள்ளைகள் மூலம் சந்தோஷம் கிடைக்கும். நீங்கள் செய்யும் காரியங்களுக்கு எதிர்பார்த்த ஆதரவு கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. சனி பகவானை தீபம் ஏற்றி வணங்க காரிய தடை நீங்கும். மன குழப்பங்கள் குறையும்.

அவிட்டம்: இந்த காலகட்டத்தில் எதிர்ப்புகள் விலகும். எதிலும் உடனடியாக முடிவு எடுக்க முடியாத நிலை ஏற்படும். மற்றவர்கள் மத்தியில் உங்களது பேச்சுக்கு முக்கியத்துவம் இருக்காது. எனவே அறிவுரைகள் கூறுவதை தவிர்ப்பது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் வீண் அலைச்சலும், மனச்சோர்வும் அடைய நேரிடும். குடும்பத்தில் இருப்பவர்களின் செயல்கள் நிம்மதியை பாதிப்பதாக இருக்கும். கணவன், மனைவிக்கிடையே திடீர் இடைவெளி ஏற்படலாம். பிள்ளைகள் மூலம் வீண் செலவு, சிறு பிரச்சனைகள் உண்டாக நேரலாம். கவனமாக இருப்பது நல்லது. எதிலும் உடனடி முடிவு கிடைக்காமல் இழுபறியான நிலை காணப்படும். மற்றவர்களிடம் கவனமாக பேசுவது நல்லது. குலதெய்வத்தை வணங்கி வர கஷ்டங்கள் தீரும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும்.

சதயம்:  இந்த காலகட்டத்தில் செலவு குறையும். எதிலும் அவசர முடிவு எடுப்பதை தவிர்ப்பது நல்லது. எதையும் ஆக்கப்பூர்வமாக செய்ய வேண்டும் என்ற எண்ணம் தோன்றும். மனத் தெளிவு உண்டாகும். திடீர் இடமாற்றம் உண்டாகலாம். உத்தியோகத்தில் இருப்பவர்கள் திறமையாக செயல்படுவார்கள். நிர்வாகத்தினரின் ஆதரவும் கிடைக்கப் பெறுவார்கள். குடும்பத்தில் நிம்மதியும் சுகமும் உண்டாகும். கணவன், மனைவிக்கி டையே இருந்த இடைவெளி குறையும். தாய், தந்தையின் உடல் நிலையில் கவனம் தேவை. குடும்ப வருமானம் உயரும். பிள்ளைகள் உங்களது வார்த்தைகளை மதித்து நடப்பார்கள். எந்த சூழ்நிலையிலும் நிதானமாக யோசித்து எடுக்கும் முடிவுகள் நன்மை தரும். பயணம் செல்ல நேரலாம். மாரியம்மனை வழிபட தடைப்பட்ட பணம் வந்து சேரும்.

பூரட்டாதி: நயமான வார்த்தைகள் பேசி பலரது நன்மதிப்பை பெறும் உங்களுக்கு இந்த காலகட்டத்தில் நீங்கள் ஆராய்ந்து செய்யும் காரியங்கள் சாதகமான பலன் தரும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. ஆயுதங்கள் கையாளும் போதும் வாகனங்களை ஓட்டும்போதும் எச்சரிக்கை அவசியம். அடுத்தவர்களுக்கு உதவ போய் வீண் பழி ஏற்படலாம் கவனம் தேவை. புதியதாக இடம் வாங்குவீர்கள். உத்தியோகத்தில் கூடுதல் பணிச்சுமையை ஏற்க வேண்டி இருக்கும். மேலதிகாரிகளிடம் உங்களது கருத்துக்களை தெரிவிக்கும்போது கவனமாக பேசுவது நல்லது. பணி நிமித்தமாக பயணங்கள் ஏற்படலாம். ஆடை, ஆபரண சேர்க்கை உண்டாகும். துர்க்கை அம்மனை பூஜித்து வணங்க எல்லா நன்மைகளும் உண்டாகும். மனத் துயரம் நீங்கும்.

உத்திரட்டாதி: இந்த காலகட்டத்தில் மனதில் ஏதாவது கலக்கம் ஏற்படும். ஒதுங்கி சென்றாலும் வலிய வந்து சிலர் சண்டை போடலாம் கவனமாக இருப்பது நல்லது. கண் சம்பந்தமான கோளாறுகள் ஏற்படலாம். வேளை தவறி உணவு உண்ணும்படி நேரலாம். உத்தியோகத்தில் இருப்பவர்கள் அதிகம் பணியாற்றுவதால் உடல் சோர்வடைய நேரலாம். வேலை செய்யும் இடத்திலும் மேல் அதிகாரிகளிடமும் வீண் பேச்சுக்களை தவிர்ப்பது நல்லது. எதிர்பார்த்த பணி உயர்வு கிட்டும். குடும்பத்தில் ஏதாவது வேண்டாத பிரச்சனை தலை தூக்கலாம். உறவினர்கள், நண்பர்கள், பிள்ளைகள் என்று யாரிடமும் வீண் சண்டையை தவிர்ப்பது நல்லது. கணவன், மனைவிக்கிடையே திடீர் கருத்து வேற்றுமை ஏற்படலாம். சூரியனை வழிபட கடன் பிரச்சனை தீரும். செல்வநிலை உயரும்.

ரேவதி: இந்த காலகட்டத்தில் எதிலும் முன்னேற்றம் காணப்படும். எதிர்பார்த்த பணவரத்து இருக்கும். உடல் ஆரோக்கியம் பெறும். உழைப்பு வீணாகும். வீட்டை விட்டு வெளியில் தங்க நேரலாம். திடீர் செலவு உண்டாகும். அடுத்தவருக்கு எவ்வளவு நல்லது செய்தாலும் அது எடுபடாமல் போகலாம். பொருள் வரத்து அதிகரிக்கும். வாகனம், பூமி மூலம் லாபம் கிடைக்கும். பல தடைகளை தாண்டி செயல்பட வேண்டி இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களின் செயல் திறமை வெளிப்படும். சுதந்திரமாக செயல்படும் வாய்ப்பு கிடைக்கும். வரவேண்டிய பணம் வந்து சேரும். மேலிடத்தில் இருந்து வந்த கருத்து மோதல்கள் அகலும்.  பெருமாளை பூஜித்து வணங்கி வர எல்லா நன்மைகளும் உண்டாகும். காரிய அனுகூலம் ஏற்படும்.