கிச்சன் டிப்ஸ்



*புளிக்கு  பதிலாக நெல்லிக்காயை அரைத்துப் போட்டு ரசம்வைத்து சாப்பிட்டால் வித்தியாசமான சுவையில் ரசம் சூப்பராக இருக்கும். விட்டமின் ‘சி’யும் கிடைக்கும்.
*பருப்பு உசிலிக்கு தேங்காயில்லை எனில் கவலை வேண்டாம். பெரிய வெங்காயம் இருந்தால் நறுக்கி வதக்கி பருப்புக் கலவையில் சேர்த்து உசிலி ஆக்கலாம். வாசனையும், சுவையும் அருமையாக இருக்கும்.
*கத்தரிக்காய் வற்றலுடன் மொச்சை சேர்த்து காரக்குழம்பு வைத்தால் காம்பினேஷன் சூப்பராக இருக்கும்.
*அப்பம் சாஃப்டாக வர வாழைப்பழம் சேர்த்து மாவு கரைக்க வேண்டும்.

- கே.நாகலட்சுமி, சென்னை.

*பொங்கல் செய்யும் போது தண்ணீர் அதிகமாகி விட்டதா? அத்துடன் சிறிதளவு ரவையை வறுத்து கலந்து விட்டால் கெட்டியாகி விடும்.
*தேங்காய் சாதம் செய்யும் போது, அத்துடன் சிறிதளவு வறுத்தரைத்த வெந்தயப்பொடி கலந்தால் சுவையும், மணமும் நன்றாக இருக்கும்.
*வாழைப்பூ ஆயும் போது சிறிது உப்பை கையில் தடவிக் கொண்டு ஆய்ந்தால் கை பிசு பிசுக்காது.

- கே.காசி, வந்தவாசி.

*முள்ளு முறுக்கு செய்யும் போது உருளைக்கிழங்கை வேகவைத்து, நன்கு மசித்து, மாவுடன் கலந்து செய்யலாம்.

*சர்க்கரைப் பொங்கல் செய்யும் போது வெல்லத்தையும், சர்க்கரையையும் சரிபாதியாகக் கலந்து செய்யலாம்.

*கோதுமை மாவு அரைக்கும் போது கோதுமையுடன் கம்பு, கேழ்வரகு, சோளம் போன்ற சிறு தானியங்களையும் சேர்த்து அரைக்கலாம்.

- தாரா, கோவை.

* குளிர்ந்த நீரில் சில சொட்டுகள் எலுமிச்சைச் சாறை விட்டு அதில் காய்கறிகளைப் போட்டு வைத்தால், காய்கறிகள் அப்போது தான் பறித்தது போல் இருக்கும்.

*பாகற்காயை சமைப்பதற்கு முன்னால் அரை மணி நேரம், உப்புக் கலந்த தண்ணீரில் ஊறவைத்தால் அதன் கசப்புக் குறையும்.

*குக்கரில் கறைகள் இருந்தால், புளித்த மோரை ஊற்றி, ஊறவைத்து தேய்த்துக் கழுவினால் கறைகள் நீங்கி சுத்தமாக இருக்கும்.

- எஸ். வளர்மதி, கன்னியாகுமரி.

*அடைக்கு அரைக்கும் போது, ஒன்றிரண்டு கேரட்டை நறுக்கிச் சேர்த்தால் சுவையும் கூடும். சத்தும் கிடைக்கும்.

6 தோசை வார்க்கும் போது, தோசையின் மேல் தேங்காய்த் துருவலைத் தூவினால் சுவையாக இருக்கும்.

6ஆப்பிள் புளிப்பாக இருந்தால் நறுக்கி, உப்பு, மிளகாய்ப் பொடி, வெந்தயப்பொடி, பெருங்காயப் பொடி சேர்த்து தாளித்தால் புதுமையான ஆப்பிள்
ஊறுகாய் தயார்.

- ஆர். பத்மப்ரியா, திருச்சி.

6 உளுந்து வடை செய்யும் போது அரைத்து வைத்த மாவுடன் கொஞ்சம் ஊறவைத்த பயத்தம் பருப்பைக் கலந்து வடை செய்ய மொறு மொறுப்பாகவும் சுவையாகவும் இருக்கும்.
6 இட்லி மாவு, தோசை மாவு புளிக்காமல் இருக்க மாவின் மேல் கொஞ்சம் சர்க்கரையைத் தூவினால் போதும்.

6 பாசிப்பருப்பு குழையாமல் வேகவைக்க ஒரு டிபன் பாக்ஸில் தேவையான நீர் வைத்து பருப்பைப் போட்டு மூடி, குக்கரில் வைத்தால் பருப்பு குழையாமல் வெந்திருக்கும்.
- ஆர். பூஜா, சென்னை.

6 தயிர் பச்சடி நீர்த்து விட்டால் சிறிது வேர்க்கடலையை வறுத்து நைசாகப் பொடி யாக்கி கலந்தால் கெட்டியாவதோடு சுவை, சத்து எனர்ஜி கிடைக்கும்.

6 தோசை மாவு புளித்து விட்டால் 1 டம்ளர் பால் ஊற்றினால் புளிப்பு சரியாகி விடும்.

6 தண்ணீர் நன்றாக இல்லாவிட்டால், சாதம் வெண்மையாக இருக்காது, அதற்கு சில சொட்டு எலுமிச்சை சாறு சேர்த்தால் சாதம் பொலபொலவென்று வெண்மையாக இருக்கும்.

6 தக்காளி சூப் நீர்த்துப் போய் விட்டதா? வெந்த உருளைக்கிழங்கு ஒன்றை மசித்துச் சேர்த்தால் ருசியுடன் சத்தும்  அதிகம் கிடைக்கும்.

- வசந்தா மாரிமுத்து, சென்னை.

சோளே பட்டூரா

தேவையானவை : மைதா மாவு - 1/2 கிலோ, பால் - 1 டம்ளர், புளிக்காத தயிர் - 2 டேபிள் ஸ்பூன், ரவை - 2 ஸ்பூன், சர்க்கரை - 2 டேபிள் ஸ்பூன், எண்ணை - 2 ஸ்பூன், உப்பு - தேவையான அளவு, சென்னா மசாலா - 3 ஸ்பூன்.

சோளே செய்ய தேவையானவை : வெள்ளை சுண்டல் - 200 கி, (இரவு ஊறவைத்து வேகவைத்துக் கொள்ளவும்), பெரிய வெங்காயம் - 2, பச்சை.மிளகாய் - 2, பூண்டு இஞ்சி பேஸ்ட் - 2 ஸ்பூன், பிரிஞ்சி இலை - 1, கிராம்பு - 5, பட்டை - சிறிதளவு, தக்காளி - 3 மிக்ஸியில் விழுதாக அரைக்கவும்.
செய்முறை : வாணலியில் எண்ணெய் விட்டு, பிரிஞ்சி இலை, கிராம்பு, பட்டை சேர்த்து தாளித்து, இஞ்சி பூண்டு கலவையை சேர்க்கவும். பிறகு வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து நன்றாக வதங்கியதும், தக்காளி விழுது சேர்த்து வதக்கவும். நன்கு வதங்கி பச்சை வாசனை போனதும் சென்னா மசாலா சேர்த்து அதில் வேகவைத்த சுண்டலை சேர்க்கவும். இதில் ஒரு கையளவு சுண்டலை தனியாக எடுத்து மிக்சியில் அரைக்கவும். மசாலா நன்கு வதங்கி சுண்டல் எல்லாம் ஒன்றாக சேர்ந்து வரும் போது அரைத்துள்ள சுண்டல் விழுதை சேர்த்து தேவையான அளவு தண்ணீர் விட்டு ஒரு கொதி வந்ததும் கொத்தமல்லி தூவி இறக்கவும். பூரி சுட கொடுத்துள்ள மாவினை நன்றாக பிசைந்து அதை பூரியாக சுட்டு சோளே பட்டூரா சூடாக சாப்பிட சுவையாக இருக்கும்.

- தனுஜா ஜெயராமன், சென்னை.