கொரியா பொண்ணுங்க கூழ் ஊத்துறாங்கோ! : திருவிழா





காஞ்சிபுரம் மாவட்டம், சுங்குவார்சத்திரம் அருகே அமைந்துள்ள திருமங்கலத்தில்தான் இந்த கலர்ஃபுல் கலாட்டா!

தமிழக பாரம்பரிய வாத்தியமான தப்பு மற்றும் மேளதாளத்துடன் கிராம கலைஞர்களும் தென்கொரிய கலைஞர்களும் இணைந்து இசை நிகழ்த்திக்கொண்டிருந்தனர் ஒரு பக்கம். பட்டுச்சேலை அணிந்த கொரிய பெண்கள் தலைவாரி, பூ சூடி, நெற்றியில் குங்குமமும் இட்டுக்கொண்டனர் மறு பக்கம்!

தங்கள் வீட்டுக்கு வந்த கொரிய விருந்தினருடன் அக்கிராம மக்கள் ஊர்வலமாக கோயில் வந்தடைந்தனர். நம் பெண்களைப் போலவே கொரிய பெண்களும் தலையில் பொங்கல் கூடை சுமந்து ஊர்வலம் வந்தனர். பசுஞ்சாண வறட்டியில் அடுப்பேற்றி பொங்கல் வைத்தனர். திருவிழாவின்
இறுதிக்கட்டமாக கொரிய பெண்மணிகள் கூழ் வார்த்தல் செய்து குதூகலமானார்கள்!

இதுபோன்ற இந்திய - கொரிய கலாசார விழாக்களை ஆண்டுதோறும் நடத்தி வருகிறது ஹுண்டாய் மோட்டார்ஸ் நிறுவனம். (விரிவாகப் படிக்கவும் புகைப்பட ஆல்பம் பார்க்கவும்: kungumamthozhi.wordpress.com)