இனியவை 20 நடிகை பார்வதி மேனன்




அழகு... அறிவு... உங்களுடைய பார்வையில்?
அழகு...  நம்ம நம்பிக்கையை ஒருபடி மேலே உயர்த்தும் விஷயம். அறிவு... மத்தவங்க கிட்ட நம்ம திறமையை வெளிக்காட்டும் பவர்ஃபுல்லான ஒரு ஆயுதம்!

தினமும் பின்பற்றும் முக்கிய விஷயம்?
சூரிய நமஸ்காரம். எந்த நாட்டுக்குப் போனாலும் அதை மட்டும் மிஸ் பண்ணவே மாட்டேன்!

இளமைக்காலத்தைத் திரும்பிப் பார்த்தால், மிகவும் பசுமையான பக்கம்?
6 வயசுல கேரளாவுக்கு பாட்டி வீட்டுக்குப் போயிருந்தேன். தண்ணீருக்கு நடுவுல பாட்டி வீடு, சுற்றிலும் மரங்கள், பச்சைப்பசேல் சூழல். ரொம்ப ரம்மியமான மறக்கவே முடியாத நாட்கள்!

குழந்தைகளுக்கேற்ற ஜாலியான படங்கள்... பயப்பட வைக்கும் அல்லது பிரமிக்க வைக்கும்      படங்கள்... உங்கள் தேர்வு?
கார்ட்டூன் படங்கள்தான் என்னோட எவர்க்ரீன் இன்ட்ரஸ்ட். கணக்கு வழக்கு இல்லாம நிறைய படங்கள் பார்த்திருக்கேன். அதுலயும் ‘திவீஸீபீவீஸீரீ ழிமீனீஷீ’ படத்தை எத்தனை தடவை பார்த்திருக்கேன்னு எனக்கே தெரியாது!

உற்சாக ரகசியம்?
அப்பாவும் அம்மாவும்   எனக்கு கொடுக்கும் சப்போர்ட்.

கொட்டும் மழை... மெல்லிய சாரல்... மிதமான வெயிலுடன் கூடிய சாரல்... பார்வதிக்குப் பிடித்தது?
மழைக்கான அடையாளம் தெரிந்தாலே எனக்குக் கொண்டாட்டம்தான். கொட்டும் மழையில் ஆட்டம் போட ரொம்ப ரொம்பப் பிடிக்கும்.



‘நான் இப்படித்தான்’ - உங்களைக் குறித்து சொல்ல ஒரு வாக்கியம்?
எல்லாருக்கும் உண்மையா இருப்பேன்... அன்பாகவும் இருப்பேன்!

மனம் கவர்ந்த பிரபலம்?
நடிகை ஸ்மிதா பாட்டீல். மராத்தி சினிமா இண்டஸ்ட்ரியில ‘ஒன் உமன் ஆர்மி’யா கலக்கினவங்க!

மறக்க நினைப்பீர்களா? மன்னிக்க மட்டும் நினைப்பீர்களா?
மன்னிப்புதான் எந்த விஷயத்துக்கும் தீர்வு.

நெடுஞ்சாலைப் பயணம்... மிதமான வேகத்தில்... மிக வேகமாக... நீங்கள் விரும்புவது?
70-80 ஸ்பீடுல ஹைவேஸ்ல டிரைவ் பண்றது எனக்கு ரொம்பப் பிடிச்ச விஷயம். அதுலயும் தன்னந்தனியா டிரைவ் பண்றது இருக்கே... ஐ லவ் இட்!

அதிகம் சோர்வடைய வைப்பது?
ஷாப்பிங்தான்!

ஒரே ஒரு முறையாவது சந்தித்து விட விரும்பும் நபர்?
ஐயோ... அந்த லிஸ்ட்ல நிறைய பேர் இருக்காங்க. சினிமா டைரக்டர்ஸ், நடிகர்கள், டான்ஸர்ஸ், ஓவியர்கள்னு அந்த லிஸ்ட் ரொம்பப் பெருசு!  

நொடியில் உங்களை மகிழ்ச்சியடைய வைக்கும் விஷயம்?
குழந்தைகள்... எல்லாக் கவலை       களையும் சட்டுன்னு கரைய வச்சிடும் அவங்களோட சிரிப்பு!

மனதை ரணமாக்கும் விஷயங்களை எப்படி கையாளுவீர்கள்? அமைதியாக அதே நேரம் உறுதியாக... அல்லது அழுது தீர்த்து..?
நான் ரொம்ப திடமான பொண்ணு. அதனால பொறுமையா யோசிச்சு, நிதானமா அதுல இருந்து வெளியவந்துடுவேன்.

சமீபத்தில் ரசித்துப் பார்த்த திரைப்படம்?
ஷிலீவீஜீ ஷீயீ ஜிலீமீsமீus

உங்களை இசை உருக வைத்திருக்கிறதா?
பல திரைப்படங்களில் பின்னணியில் ஒலிக்கும் மெல்லிய இசை என்னை ரொம்ப பாதிச்சிருக்கு. அதுலயும் ரஹ்மான் சார் இசை... அடடா அதை அடிச்சுக்கவே     முடியாது!

மொழி தெரியாத ஊர்களில் மாட்டிக் கொண்டு முழித்த சுவாரஸ்யமான அனுபவங்கள் ஏதேனும் உண்டா?
இதுவரைக்கும் அந்த மாதிரி நடந்ததில்லை. எங்கே   போனாலும் எப்படியாவது பேசி சமாளிச்சுடுவேன். அந்த விஷயத்துல பார்வதி தி கிரேட்!

கட்டாந்தரை... பஞ்சு மெத்தை... சுகமான            நித்திரை எதில்?
தூக்கம் வந்துட்டா, தரையில தலைக்கு கை வச்சுப் படுத்து, கண்ணை மூடினாக்கூட உடனே தூங்கிடுவேன்!

ஜன்னலோர பயணங் களை ரசிப்பவரா நீங்கள்?
ரொம்பப் பிடிக்கும். அதுலயும் ரயில்ல ஜன்னலோர இருக்கைன்னா ரொம்ப என்ஜாய் பண்ணுவேன்!

‘இது மட்டும் போதும் வாழ்க்கையில்’. எது?
இப்ப இருக்குற மாதிரி சந்தோஷமா எப்பவும் இருந்தாலே போதும்!
தொகுப்பு: எஸ்.பி.வளர்மதி