உலக பாரம்பரிய உணவுகள் : அறிவோம் ஆயிரம்





உலகெங்கும் கணக்கிலடங்காத உணவுப் பழக்கவழக்கங்கள் இருந்தாலும், ‘நதிமூலம்’ பார்த்து வகைப்படுத்தும் போது அவை நாகரீகம் சார்ந்தே பிரிக்கப்படுகிறது. ஜப்பான், அரபு, புத்தம், மொஹல் என சமயரீதியான உணவுகள் ஏராளம். இந்தியா நீங்கலாக, உலகில் புகழ்பெற்ற மிகப்பழமையான பாரம்பரிய உணவுகள் உங்களுக்காக....

Jewish cuisine

*   ஏகப்பட்ட சட்டதிட்டங்களுக்கு உட்பட்டது யூத உணவு. பன்றி மாமிசம், சிலவகை மீன்கள் தவிர்க்க வேண்டும். மாமிச உணவுகளுடன் பால் பொருட்களை கலப்பது கூடாது. குறிப்பிட்ட முறையில் கண்டிப்பாக மாமிசங்களை சுத்தப்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட நிறைய விதிகளை கொண்ட இந்த உணவுகள் மிகவும் பாரம்பரியமான முறையில் தயாரிக்கப்படுகின்றன. பொதுவாக 3 வகையான யூத உணவுகள் புழக்கத்தில் உள்ளன.

3 வகை யூத உணவுகள்
Ainu cuisine
*   உலகில் இருபதாயிரம் பேர் மட்டுமே இருப்பதாக சொல்லப்படும் கிவீஸீu என்கிற ஜப்பானிய பழங்குடி இனத்தின் உணவுகள்தான் மிகப்பழமையானதாகக் கூறப்படுகிறது. உலகில் மொத்தம் 3 ஹோட்டல்களில் மட்டுமே இந்த உணவு பாரம்பரியமாக பரிமாறப்படுகிறது. இதன் சிறப்பு சமைக்கப்படாத ஃப்ரெஷ் மாமிசம்!

Ainu cuisine
*   உலகில் இருபதாயிரம் பேர் மட்டுமே இருப்பதாக சொல்லப்படும் கிவீஸீu என்கிற ஜப்பானிய பழங்குடி இனத்தின் உணவுகள்தான் மிகப்பழமையானதாகக் கூறப்படுகிறது. உலகில் மொத்தம் 3 ஹோட்டல்களில் மட்டுமே இந்த உணவு பாரம்பரியமாக பரிமாறப்படுகிறது. இதன் சிறப்பு சமைக்கப்படாத ஃப்ரெஷ் மாமிசம்!

  Buddhist cuisine

*   உலகெங்கும் உள்ள பெரும்பான்மை புத்த மடாலயங்களின் அடிப்படையிலான உணவு. சைவ உணவு... அதிலும் வேர் வகை உணவுகள் - அதாவது, மண்ணுக்குக் கீழ் விளைவன தவிர்க்கப்பட வேண்டியதாகும். ‘உயிர் கொல்லாமை’ என்பதை ‘தாவரம் கொல்லாமை’ என்றும் எடுத்துக்கொண்டு தாவர வேர்களை தவிர்க்கிறார்கள்.

Berber cuisine
*    வட ஆஃப்ரிக்காவின் இந்த உணவை வகை பிரிப்பதே கடினம். அத்தனை பிரிவுகளும் வகைகளும் உள்ளன. சோளம், பார்லி, ஆட்டுப்பால், சீஸ், வெண்ணெய், தேன், மாமிசம் ஆகியவையே பெரும்பாலும் இடம்பெறும்.

  Chinese Islamic Cuisine
*   பிuவீ  என்னும் பாரம்பரிய சீன முஸ்லீம்களின் உணவு இது. லிணீனீவீஸீ என்னும் ஒரு வகை நூடுல்ஸ் பிரதான உணவு.

Peranakan cuisine
*   பீனாங்கு, மலாக்கா, சிங்கப்பூரிலிருந்து புலம்பெயர்ந்து மலேசியா வில் வாழ்பவர்களால் தயாரிக்கப்படும் உணவு. மசாலா, புளி, காரம் அதிகம் உள்ளவை.

Pennsylvania Dutch cuisine
*    உருளைக் கிழங்கு மற்றும் மாமிசத்துடன் சேர்த்து செய்யப்படும் இந்த உணவுகள் மிகப்பிரசித்தி பெற்றவை.


Arab cusine
*       பாலைவன நாடுகளான அரேபியாவில் மாமிசம் மிக முக்கிய உணவு. உலர் பழங்கள், பார்லி, கோதுமை, அரிசி, பால் பொருட்கள், மாமிசம் மற்றும் ஏராளமான மசாலா பொருட்களுடன் கண்ணுக்கும் நாவுக்கும் விருந்து அரேபிய உணவுகள்!

  Parsi cuisine   
*   இன்னொரு பழமையான உணவு பார்சி இனத்தவருடையது. உருளைக்கிழங்கு பிரதானம். கீரை, பருப்புகளும் முக்கிய இடம் பெற்றிருக்கும்.
தொகுப்பு: ரங்கநாயகி மாணிக்கம்