காளான் பட்டாணி ஸ்டியூ செஃப் ஆனந்த்





என்னென்ன தேவை?

காளான்-  10, பச்சை பட்டாணி - 2 டீஸ்பூன், வெங்காயம் - 1, பச்சை மிளகாய் - 2, இஞ்சி - 1 துண்டு, சீரகம் - கால் டீஸ்பூன், மிளகு - 10, கெட்டியான தேங்காய் பால் - 150 மிலி, தேங்காய் எண்ணெய் - ஒன்றரை டீஸ்பூன், உப்பு - தேவைக்கேற்ப, கறிவேப்பிலை - சிறிது.

எப்படிச் செய்வது?
கடாயில் தேங்காய் எண்ணெய் விட்டு சூடாக்கி, சீரகம், மிளகு தாளிக்கவும். மெலிதாக, நீளமாக நறுக்கிய வெங்காயம், பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், இஞ்சி சேர்த்து வதக்கவும். பிறகு சுத்தம் செய்த காளான், பச்சை பட்டாணி சேர்த்து வதக்கவும். வதங்கியதும், தேங்காய் பாலும், உப்பும் சேர்க்கவும். கலவை நுரைத்து வரும் போது, இறக்கி, கறிவேப்பிலை தூவிப் பரிமாறவும். தேங்காய் பால் சேர்த்த பிறகு கலவை கொதிக்கக் கூடாது. அப்படிக் கொதித்தால் தேங்காய் பால் திரிந்து போவதுடன், சுவையும் கெட்டுப் போகும்.

இந்த ஸ்டியூவை இடியாப்பம், புட்டு ஆகியவற்றுடன் சேர்த்து சாப்பிடலாம்.
- ஆர். வைதேகி
படங்கள்: லோகநாதன்