ப்ரியங்களுடன்





எம்.எஸ்.ஸின் ‘காற்றினிலே வரும் கீதம்’ உலகில் சங்கீதம் உலவும் வரையில் இருக்கும்.
- தங்கம் வின்சென்ட், திருப்பூர்-1 மற்றும் இ.டி.ஹேமமாலினி, சென்னை-23.

‘மரங்களின் தாய்’ வாங்கரி மத்தாய் பற்றிப் படித்ததும் பெண் என்பவள் தன் குழந்தைக்கு மட்டுமல்ல... இயற்கைக்கே பொதுவானவள் என்கிற எண்ணம் மேலோங்கியது.
- யாழினி ராம்பிரகாஷ், சேலம்-7 மற்றும் ம.வசந்தா, கச்சிராயபாளையம்.

‘அந்தமானைப் பாருங்கள் அழகு’ என எங்களை சுற்றுலா செல்ல தூண்டிவிட்டு விட்டீர்கள்!
- காமாட்சி சத்தியநாராயணன், சென்னை-61 மற்றும் ஆர்.ராஜம்மாள், மேட்டுப்பாளையம்.

‘எந்த எண்ணெயில் என்ன இருக்கிறது?’ என்பதை தெளிவாக விளக்கிய ‘குங்குமம் தோழி’யை எண்ணெயினாலேயே அபிஷேகம் செய்து பாராட்ட வேண்டும்!
- நா.கற்பகம், வேலூர்-6, ஜி.மைதிலி, விசலூர் மற்றும் சுமித்ரா பிரேம்குமார், சென்னை-11.

அடிக்கடி விரதம் கடைப்பிடிக்கும் என் போன்றவர்களுக்கு ‘விரதம் ஏன்? எது? எப்படி? எப்போது?’ கட்டுரை வரப்பிரசாதம்!
- கஸ்தூரி கதிர்வேல், காட்பாடி, ஆர்.பிரேமா, பெங்களூரு-83 மற்றும் வரலஷ்மி, சென்னை-37.

புஷ்பவனம் குப்புசாமி நல்ல பாடகர் மட்டுமல்ல... நல்ல கணவரும்கூட!
- ஜே.தனலட்சுமி, கொசப்பேட்டை மற்றும் பர்வீன் பாத்திமா, சென்னை-91.

நடிகை சரண்யா தேசிய விருது பெற்றாலும்கூட, ‘பிள்ளைகளுக்கு நடிப்பு வேண்டாம்... படிப்பே போதும்’ என கவனமாக இருப்பது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது.
- பி.கீதா, சென்னை-68., எஸ்.விஜயா, திருச்சி-13 மற்றும் உமாதேவி, திருவண்ணாமலை.

சம்மர் கேம்ப் விவாதம் - பிரமாதம். ஒவ்வொரு பெற்றோரும் படித்து, கடைபிடிக்க வேண்டும். மெஷினுக்கு கூட ஓய்வு தேவைப்படுகிறது. பாவம்... குழந்தைகள் மட்டும் விதிவிலக்கா?
- அ.பிரேமா, சென்னை-68., எஸ்.விஜயலட்சுமி, ஆதம்பாக்கம்.,
மகாலஷ்மி சுப்ரமணியன், புதுச்சேரி-9 மற்றும் சுஜாதா, சென்னை-61.


தேங்காய்நார் கழிவில் இவ்வளவு அதிசயமா? பெண்களுக்கான சட்ட தகவல்களும் அருமை!
- எஸ்.ராஜேஸ்வரி பாலு, திருநெல்வேலி-6 மற்றும் எம்.ஸ்ரீபிரியா, சென்னை-64.

‘அம்மான்னா உயிர்’ என்ற சிவகார்த்திகேயனின் தாய்ப்பாசம்தான் அவரை இந்த உயரத்துக்குக் கொண்டு வந்திருக்கிறது.
- சுகந்தாராம், சென்னை-59., உஷா, மதுரை-6., கீதா பிரேமானந்த், சென்னை-68.,

பேச்சியம்மாள், புதுசத்திரம் மற்றும் வே.அருணாதேவி, வடமாதிமங்கலம்.
‘கற்பனையும் கைத்திறனும்’ பகுதியில் டெகரேட்டிவ் லேம்ப் ஷேட் அசத்தல்!
- வெ.திவ்யா, காட்பாடி.

பெண் பாடலாசிரியை இசை = திறமை + தன்னம்பிக்கை!
- வி.மோனிஷா பிரியங்கா, திருச்சி-18.

மனவளர்ச்சிக் குறைபாடு உள்ள குழந்தைகளுக்கு அம்பிகா காமேஷ்வர் அர்ப்பணிப்பு உணர்வோடு செய்யும் தொண்டு பாராட்டுக்குரியது.
- பழ.கவிதா சிவமணி, புன்செய்ப்புளியம்பட்டி மற்றும் அகிலா ஆறுமுகம், கழுகுமலை.

சினிமா துறையிலும் பெண்கள் புகுந்து கலக்குவது ‘எங்கெங்கு காணினும் சக்தியடா’ என்ற பாரதியின் வரிகளை ஞாபகப்படுத்தியது.
- அ.யாழினி பர்வதம், சென்னை-78., வசந்தா மாரிமுத்து, சென்னை-64 மற்றும்
ஜே.சி.ஜெரினாகாந்த், சென்னை-16.

கிராமத்து விளையாட்டுகள் என் இளம்பருவத்தை ஞாபகப்படுத்தியது.
- பானு பெரியதம்பி, சேலம்-30, தனலட்சுமி ஜானகிராமன், சென்னை-12 மற்றும்
ஆர்.சாந்திபகவதி, சென்னை-23.

24 மணி நேரத்தையும் உபயோகமாக, திட்டமிட்டுச் செயல்படும் கமீலா நாசரின் சாமர்த்தியம் பாராட்டுக்குரியது.

- சுகந்தா ராம், சென்னை-59, எம்.வேலம்மாள் முத்துக்குமார், பனகுடி, மல்லிகா அன்பழகன், சென்னை-78, - வி.சரஸ்வதி, சென்னை-4 மற்றும் கோமதி பழனிச்சாமி, ஆரல்வாய்மொழி.