ரஜினி + விஜய்சேதுபதி



சமீபத்தில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்க உள்ள படத்தை தயாரிப்பதாக அறிவித்துள்ளது சன்  பிக்சர்ஸ். காலா மற்றும் 2.0 படங்களுக்கு பிறகு ரஜினியின் அடுத்த படம் இந்தப் படம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்தப் படத்திற்கு அனிருத் இசை அமைக்கிறார். விஜய்சேதுபதி இந்தப் படத்தில் நடிக்க உள்ளதாக சன் பிக்சர்ஸ்  அறிவித்துள்ளது. ரஜினிகாந்த்துடன் விஜய் சேதுபதி இணைந்து நடிப்பது இதுவே முதல் முறை. ரஜினி மற்றும் விஜய்  சேதுபதியின் ரசிகர்களுக்கு இந்த அறிவிப்பு இரட்டை கொண்டாட்டத்தை கொடுத்திருக்கிறது.

- ஜெ.சதீஷ்